மீண்டும் விஜய்-அஜித் போட்டா போட்டி

jilla2014ம் ஆண்டு கோலிவுட்டில் அதிக எதிர்பார்போடு ஆரம்பாமாகிறது.

காரணம் தமிழ் திரையுலகின் இன்றைய சூப்பர் ஸ்டார்களான அஜித்-விஜய் நடித்த படங்கள் வருடத் தொடக்கத்திலேயே பொங்கல் நாளில் வெளியாக இருப்பதுதான். இதற்கு முன்பு கடந்த 2007ம் ஆண்டு இதே பொங்கல் நாளில்தான் விஜய் நடித்த போக்கிரி, அஜித் நடித்த ஆழ்வார் படங்கள் ஒன்றாக வெளியாகி போட்டியை சந்தித்தன.

இந்நிலையில் ஏழு வருடங்களுக்கு பிறகு பொங்கல் தினத்தில் விஜய்(ஜில்லா), அஜித்(வீரம்) நடித்த படங்கள் மீண்டும் போட்டா போட்டியில் வெளியாக உள்ளன. இவ்விருபடங்களும் பொங்கலையொட்டி நாளை அதவாது 10ம் தேதி திரைக்கு வருகிறது. இதனால் இரண்டு ஸ்டார்களின் ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Ajith-Veeramதங்களது தலைவர் படம் வெளிவருவதால் அஜித், விஜய் ரசிகர்கள் போட்டியிட்டு கொண்டு கட்-அவுட்கள், பேனர்கள் வைத்து வருகிறார்கள். ஒருசில இடங்களில் ரசிகர்களுக்கு இடையே கட்-அவுட்டுகள், பேனர்கள் வைப்பதில் மோதல் ஏற்பட்டு வருகிறதாம். அதுமட்டுமல்லாமல், சமூக வலைத்தளங்களில் அஜித், விஜய் ரசிகர்களிடையே கடுமையான வாக்குவாதம் நடைபெற்று வருகிறது. இரு ரசிகர்களும் ஒருவரையொருவர் மாறி மாறி கிண்டல் செய்து வருகின்றனர்.

இப்படி அஜித்-விஜய் ரசிகர்கள் ஒருவரை மாற்றி ஒருவர் மோதிக் கொண்டிருக்க சம்மந்தப்பட்ட நடிகர்களோ என்ன செய்கிறார்கள் தெரியுமா? அஜித்தோ தனது குடும்பத்தினருடன் ஆஸ்திரேலியாவில் ஒய்வுவெடிக்க, விஜய்யோ ஜில்லாவின் இறுதிகட்ட பணிகளில் கவனம் செலுத்தி வருகிறாராம்.