ஜில்லா பாராட்டு மழையில் வீரம்

veeram_jilla_001வீரம் அஜித்துக்கு பாராட்டு தெரிவித்துள்ளார் ஜில்லா விஜய்.

சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிப்பில் விஜய், மோகன்லால் நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ஜில்லா.

இன்று இப்படத்தின் சக்சஸ் மீட் சென்னை ரெசிடென்சி டவர் ஹொட்டலில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய விஜய், உலகம் முழுவதும் வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் ஜில்லா படம் அனைவரையும் கவர்ந்துள்ளது என விநியோகஸ்தர்கள் கூறுகின்றனர். மிகவும் சந்தோஷம்.

முதலில் எனது ரசிகர்களுக்கு நன்றி, படம் வெளியாகும் முதல் நாள் குளிரையும் பொருட்படுத்தாமல் திரையரங்குகளுக்கு வந்து அலங்காரம் செய்துள்ள காட்சிகளை காணொளியில் பார்த்தேன். இதன் பின்னால் இருந்த எல்லோருக்கும் நன்றி.

மேலும் அஜித் அவர்களின் ‘வீரம்’ படமும் நன்றாக வந்துள்ளது என்று கேள்விப் பட்டேன். அதில் பங்குபெற்ற அஜித், இயக்குனர் சிவா உள்ளிட்ட அனைவருக்கும் எனது பாராட்டுகள் என்று தெரிவித்துள்ளார்.