நடிகை அஞ்சலி தேவி காலமானார்

Anjali deviபழம்பெரும் நடிகை அஞ்சலி தேவி உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். 86 வயதான அஞ்சலிதேவி கடந்த ஒரு வாரமாக உடல்நலக் குறைவு காரணமாக  மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆந்திராவில் பிறந்த இவர்,  தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 500க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். தமிழில், மங்கையே மணாளனின் பாக்யம், லவகுசா, அடுத்த வீட்டுப் பெண், நிரபராதி, சர்வாதிகாரி, அன்னை ஓர் ஆலயம் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.