தாதாவை சந்தித்த சந்தானம்

santhanam_003படப்பிடிப்புக்காக தாதாவை சந்தித்து அனுமதி வாங்கியுள்ளாராம் சந்தானம்.

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தில் கொமடி ஹீரோவாக நடிக்கிறார் சந்தானம்.

ஸ்ரீநாத் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பிற்காக கடப்பாவுக்கு பட குழு சென்றது. அப்பகுதியில் படப்பிடிப்பு நடத்த வேண்டுமென்றால் உள்ளூர் தாதாவின் அனுமதி பெற்றால்தான் முடியும் என்று கூறியுள்ளனர்.

பிறகு சந்தானம் தானே அந்த ரிஸ்க்கை எடுப்பதாக கூறி தாதாவை அவரது வீட்டில் சந்தித்து அனுமதிகேட்டுள்ளார்.

அவரிடம் தாதா, அனுமதி தரணும்னா ஒரு கண்டிஷன் என்றாராம். என்னன்னு சொல்லுங்க என சந்தானமும் பயத்துடன் கேட்க, படப்பிடிப்பு முடிந்து பட குழுவினர் ஊர் திரும்புவதற்கு முன் என் வீட்டிற்கு எல்லோரும் வந்து என்னுடன் அமர்ந்து சாப்பிட்ட பிறகுதான் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.

தாதாபோட்ட கண்டிஷனை கேட்ட சந்தானம் எங்களுக்கு நேரம் இருக்காது. ஆனால் உங்களுக்காக வருகிறோம் என்று பிகுகாட்டிக்கொண்டு புறப்பட்டுவிட்டாராம்.