சொந்த மண்ணில் ஜெயிக்கணும்: நடிகர் பாலா

acterbalaஅன்பு படத்தின் மூலம் அறிமுகமானவர் பாலா. இவர் பழம்பெரும் தயாரிப்பாளர் அருணாச்சலம் ஸ்டூடியோ ஏ.கே.வேலனின் பேரன். அன்பு படத்துக்கு பிறகு பெரிய வாய்ப்பில்லாமல் இருந்தவருக்கு கேரளா பக்கம் இருந்து அதிர்ஷ்டக்காற்று அடித்தது. அங்கு ஒரு படத்தில் மம்முட்டியின் தம்பியாக நடிக்கப்போனவர். அங்கேயே செட்டிலாகிவிட்டார். இப்போது வீரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு திரும்பி வந்திருக்கிறார். வீரம் படத்தை இயக்கிய சிவா, பாலாவின் உடன்பிறந்த அண்ணன்.

இதுபற்றி பாலா அளித்த உருக்கமான பேட்டி :
எங்க தாத்தா அந்தக் காலத்தில் பெரிய தயாரிப்பாளர் கே.பாலச்சந்தர் சார் உள்பட பல டைரக்டர்களை அறிமுகப்படுத்தினவர். எங்கப்பா அரசு திரைப்பட பிரிவில் பணியாற்றியவர். பல படங்களுக்கு கதை வசனம் எழுதியிருக்கிறார். ஆனால் அவர்கள் வாரிசான நானும் அண்ணனும் சினிமாவில் ஜெயிக்க ரொம்ப போராடினோம். கேமரா மேனா வாழ்க்கையை தொடங்கிய அண்ணன் தெலுங்கில் டைரக்டரா ஜெயிச்சான். நான் தமிழ் நடிகனா வாழ்க்கையை தொடங்கி கேரளாவில் நடிகனா ஜெயிச்சேன். அங்கு 48 படங்களில் ஹீரோவா நடிச்சிருக்கேன். ஒரு படம் தயாரிச்சிருக்கேன். ஒரு படம் இயக்கி இருக்கேன். கேரள மக்கள் என்னை தங்கள் சொந்த பிள்ளையைப்போல ஏற்றுக் கொண்டார்கள்.

ஆனால் எங்கள் இருவருக்குமே சொந்த மண்ணில், பிறந்த மண்ணில் ஜெயிக்க முடியலையேங்ற ஏக்கம் இருந்தது. அண்ணன் சிறுத்தை படம் மூலமாகவும் இப்போ வீரம் மூலமாவும் சொந்த மண்ணில் ஜெயிச்சிட்டான். அவன் கைபிடிச்சு நானும் வந்திருக்கேன். வீரம் படத்துல அஜீத் சார் தம்பியா நடிச்சது நான் செய்த புண்ணியம். விரைவில் அண்ணன் டைரக்ஷனில் நடிப்பேன். என்னை தமிழ் மக்கள் இனி ஏத்துக்குவாங்கன்னு நம்பிக்கை இருக்கு என்றார்.