விஜய் வீட்டில் நடந்த “ஜில்லா” வெற்றி விழா

jillacakesuccessஜில்லா படத்தின் வெற்றி விழா சமீபத்தில் விஜய் வீட்டில் எவ்வித ஆர்பாட்டமின்றி கொண்டாடப்பட்டது.

விஜய், மோகன்லால் நடிப்பில் கடந்த 10ம் தேதி வெளியான ஜில்லா படம் அனைத்து திரையரங்குகளிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. எதிர்பார்த்தை போலவே படத்தின் வெற்றி அமைந்ததால் படக்குழுவினர் மிகுந்த உற்சாகமடைந்தனர். இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக விஜய் படக்குழவினருக்கு விருந்து அளித்தார்.

இதன் வெற்றி விழா ஜனவரி 17ஆம் தேதி விஜய் வீட்டில் ரகசியமாக கொண்டாடப்பட்டது. வெறும் 50 பேர்கள் மட்டுமே கலந்துகொண்ட இந்த விழாவில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் கலந்துகொண்டார். இயக்குனர் நேசன் ஸ்பெஷலாக வடிவமைத்திருந்த கேக்கை விஜய்யும் மோகன்லாலும் வெட்டி வெற்றி விழாவை கொண்டாடினர். கேக்கில் ‘சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸ்ஸுடா” என்று எழுதியிருந்தது.

இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பினர்களாக கே.பாக்யராஜ் மற்றும் வைரமுத்து வந்திருந்தனர். மேலும் விழாவில் இசையமைப்பாளர் இமான், இயக்குனர் ஆர்.டி.நேசன், சண்டைப் பயிற்சியாளர் சில்வா, நடிகர்கள் மகத், ஜோமல்லூரி உட்பட ‘ஜில்லா’ குழுவினர் அனைவரும் ஒன்று சேர்ந்து ‘ஜில்லா’ வெற்றியைக் கொண்டாடினர்.

இந்த விழாவுக்கு காஜல் அகர்வால் மட்டும் வரவில்லை. ஏற்கனவே ஒப்புக்கொண்டிருந்த படப்பிடிப்பில் இருந்ததால் விழாவுக்கு அவரால் வரமுடியவில்லை என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.