பழம்பெரும் நடிகர் நாகேஸ்வரராவ் (தேவதாஸ்) காலமானார்

nageswara-raoதெலுங்கு திரைப்பட உலகில் முன்னணி நடிகர் நாகேஸ்வரராவ் ( வயது 91) ஐதராபாத்தில் இன்று அதிகாலை காலமானார்.  கடந்த சில வருடங்களாக புற்றுநோயால் அவதிப்பட்ட  அவர்  இன்று மரணம் காலமானார்.

1940-ம் ஆண்டு தர்மபத்தினி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழ் ,தெலுங்கு உட்பட 240க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு இந்தியாவின் இரண்டாவது மிக உயரிய வயதான பத்ம விபூஷன் விருதை பெற்றார். பத்மஸ்ரீ விருதையும் இவர் பெற்றுள்ளார். தாதா சாகேப் – கலைமாமணி விருதுகள் பெற்றவர்.

தேவதாஸூ, லைலா மஜ்னு, அனார்கலி, பிரேமா அபிஷேகம் போன்ற படங்கள் இவர் நடிப்பில் வந்து பெரு வெற்றி பெற்றன.

நாகேஷ்வர ராவின் மகன் நாகார்ஜூன் தமிழ் – தெலுங்கில் பிரபல நடிகராக இருக்கிறார்.  நாகார்ஜூனின் மகன்  நாகசைதன்யாவும் பிரபல நடிகராக உள்ளார்.  நாகேஸ்வரராவ் மகளை பிரபல நடிகர் வெங்கடேஷ் மணந்துள்ளார்.

கடந்த 74 வருடங்களாக திரைத்துறையில் இருக்கும் இவர்,  கடையாக இவர் நடித்த படம் ‘மனம்’.  தனது மகன் நாகார்ஜூன், பேரன் நாக சைத்தன்யாவுடன் நடைத்த இப்படம் இன்னும் திரைக்கு வரவில்லை.

நாகேஷ்வரராவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ஹைதராபாத் அன்னபூர்ணா ஸ்டூடியோவில் வைக்கப்பட்டுள்ளது.