நாசரின் வாரிசும் நடிக்க வந்துவிட்டார்!

nasar sonஇது வாரிசுகளின் காலம். இப்போது நாசரின் மகன் லுப்துபுதீனும் நடிக்க வந்துவிட்டார். விஜய் டைரக்ட் செய்யும் சைவம் படத்தில் நாசரின் பேரனாக நடிக்கிறார். சினிமாவுக்காக அவருக்கு பாஷா என்று பெயர் சூட்டியுள்ளார் விஜய். இதுபற்றி டைரக்டர் விஜய் கூறியிருப்பதாவது:

என்னுடைய படங்களில் எப்போதுமே நாசர் சாருக்கு ஒரு கேரக்டர் இருக்கும். எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதை ஜீவனுள்ள கேரக்டராக மாற்றிவிடுவார். சைவம் படத்தில் கதையின் முதுகெலும்பான ஒரு முதியவர் கேரக்டரில் நாசர் நடிக்கிறார். அவரது பேரனாக நடிக்க பலபேரை ஆடிசன் செய்தும் திருப்தி வரவில்லை. நாசரின் சாயல் கொஞ்சமாவது இருக்க வேண்டுமே என்று யோசித்தபோதுதான் அவரது மகன் லுப்துபுதீனை சந்தித்தேன். அவனையே நடிக்க வைக்க முடிவு செய்தேன். ஆனால் நாசரும், கமீலா நாசரும் அவன் இன்னும் படிக்க வேண்டும் என்று நடிக்க வைக்க மறுத்தனர். அவர்களை சமாதானப்படுத்தி நடிக்க வைக்கிறேன். தந்தையை போலவே திறமையாக நடிக்கிறான். நிச்சயம் அவனும் பெரிய நடிகனாக வரும் எல்லா அறிகுறிகளும் தெரிகிறது. என்கிறார் விஜய்.