ஹன்சிகாவின் மனித நேயம் தொடருது…!

Hansika_motwani1_நடிகைகள் நடிப்பை ஒரு பக்தியாக கொண்டு இருந்தாலும், பிற சமூக விஷயங்களில் ஆர்வமாக இருக்கும் நடிகைகள் வெகு சிலர் தான். சமீபகாலமாக ஹன்சிகாவின் சமுக ஆர்வம் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஏற்கனவே ஏழை குழந்தைகள் சிலரை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் ஒரு குழந்தையை தத்தெடுத்து வருகிறார். அப்படி இவர் இதுவரை 24 குழந்தைகளை தத்து எடுத்து அவர்களின் முழு படிப்பு செலவையும் செய்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் அவர் அம்மாவிற்கு ஒரு போன் வந்திருகிறது. அப்போது புனேயில், பாலமந்திர் பள்ளியில் 8வது படிக்கும் மாணவன் கார்த்தி, அவர் தாய் தந்தைக்குள் ஏற்பட்ட மன கசப்பால் பிரிந்து வாழ்கின்றனர். மாணவனை அப்பாவின் தங்கை எடுத்து வளர்த்து வருகிறார். தற்போது அவருக்கு கேன்சர் நோய் வந்து பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் மாணவனை படிக்க வைக்க பராமரிக்க முடியாத சூழ்நிலை என்று கூறியிருக்கிறார். ஹன்சிகாவின் அம்மாவும், ஹன்சிகாவுக்கு சொல்லியிருகிறார். தனது நண்பர்கள் சிலரை புனேக்கு அனுப்பி உண்மை நிலவரத்தை விசாரிக்க சொல்லிருக்கார். அங்கு இருக்கும் அந்த சூழல் உண்மை என்று தெரிந்ததும், அந்த மாணவன் படிக்கும் பள்ளிக்கு தொடர்பு கொண்டு பேசி படிப்பு நிற்க வேண்டாம், அந்த மாணவனின் படிப்பு செலவு மற்றும் அவனின் பராமரிப்பு செலவை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று ஹன்சிகா பேசியுள்ளார். இதன்மூலம் அவர் தத்தெடுத்த குழந்தைகள் எண்ணிக்கை 25-ஆக அதிகரித்துள்ளது.

இதுப்பற்றி ஹன்சிகாவிடம் நாம் பேசியபோது, இந்த செய்தியை சொன்னவர், ஒரு நடிகையாக நான் இதை செய்வது முக்கியம் அல்ல, சமூகத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் இதைப்போல குழந்தைகள் கல்வி, ஏழை குழந்தைகளை தத்து எடுத்து படிக்க வைப்பது, அவர்களை பராமரிப்பது என்று செய்வது சமூகத்தையே மாற்றும், இது ஒருவரின் கடமை, பொறுப்பு, இதை நான் செய்வதால் மன நிறைவோடு இருக்கிறேன், நீங்களும் செய்து பாருங்கள் என்றார்.

வாழ்த்துக்கள் ஹன்சிகா, தொடரட்டும் உங்கள் சமூக சேவை!!