ஸ்ருதி ஹீரோயின், ஐஸ்வர்யா ராய் வில்லி?

shruthi_aiswaryaroi_001மணிரத்னம் படத்தில் நடிக்கவிருக்கிறாராம் ஸ்ருதிஹாசன்.

‘3’ படத்தை அடுத்து ஸ்ருதி கொலிவுட் பக்கம் இதுவரை வரவில்லை. மும்பையில் வீடு எடுத்து தங்கி இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் அவர் மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

இயக்குனர் மணிரத்னம் மகேஷ்பாபுவை வைத்து ஒரு படத்தை எடுத்து அதை தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியிடுகிறார் என்பது அனைவரும் அறிந்த செய்தி.

தனது படத்தில் நடிக்குமாறு மணிரத்னம் ஸ்ருதி ஹாஸனை கேட்டுள்ளார். ஸ்ருதிக்கும் மணியின் படத்தில் நடிக்க விருப்பம் உள்ளதால் ஓகே சொல்லிவிட்டாராம்.

மணியின் படத்தில் நாகர்ஜுனா, பஹத் பாசில், ஐஸ்வர்யா ராய் பச்சன் உள்ளிட்டோரும் நடிக்கவிருக்கிறார்கள். ஐஸ்வர்யா குழந்தை பெற்ற பிறகு நடிக்கும் முதல் படம் இது தான்.

படத்தில் ஸ்ருதி மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார். மேலும் ஐஸ்வர்யா ராய் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.