பெண்களை இழிவுபடுத்தும் விதமாக விடியோ பதிவேற்றம் செய்த இசையமைப்பாளர் அனிருத் மீது வழக்கு பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்குரைஞர் எஸ்.ஜெபதாஸ் பாண்டியன் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: நான் யூ டியூபில் ஒரு இசை விடியோ பார்த்தேன். அந்த விடியோவை இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் கடந்த 16-ஆம் தேதி யூ டியூபில் பதிவேற்றம் செய்துள்ளார்.
அந்த விடியோவில் வரும் படங்கள் வெறுக்கத்தக்க வகையிலும், பாடல் வரிகள் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் இருந்தன. மேலும், பல்வேறு மதத்தினரிடையே முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையிலும் இருந்தன.
அந்த விடியோவை தணிக்கை சான்றிதழ் பெறாமலேயே வெளியிட்டுள்ளார். அனிருத்துக்கு இது குறித்து நன்றாக தெரியும். தெரிந்திருந்தும் வேண்டுமென்றே அதைச் செய்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை மாநகர போலீஸ் ஆணையரிடம் கடந்த 20-ஆம் தேதி புகார் அளித்தேன்.
அதனுடன் அனைத்து ஆதாரங்களையும் வழங்கினேன். ஆனால், என் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, அனிருத் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது. இந்த மனு நீதிபதி சி.டி.செல்வம் முன்பு புதன்கிழமை (ஜன.29) விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, ஒரு வாரத்துக்குள் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அடுத்த
விசாரணையின்போது என்ன நிலை என்பதை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என போலீஸாருக்கு உத்தரவிட்டார்.
ஏம்பா! இப்படியா பேரைக் கெடுத்துக் கொள்ளுவது? இப்ப எல்லாரும் ‘வளர்ப்பு’ சரியில்லேணு தான சொல்லுவாங்க! அப்பா அம்மா பேரைக் கெடுத்திட்டியே!
அய இப்போதான் வந்த.அதுகுலியம்ம வேலைய கட்டிதிய