தனுஷ், ஸ்ருதிஹாசன், மாதவன், சிவகார்த்திகேயன், ஆண்ட்ரியா, வரலட்சுமி, மாளவிகா, லட்சுமிராய், நீது சந்திரா, முமைத்கான், சோனியா அகர்வால் உள்ளிட்ட முன்னணி திரை நட்சத்திரங்கள், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் முன்னணி பாடகர்கள் விஜயப்பிரகாஷ், ஹரிசரண், நரேஷ் ஐயர், ஹிப் ஹாப் மற்றும் 50க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் பங்குபெரும் மாபெரும் கலை நிகழ்ச்சி மலேசியாவில் நடைபெற உள்ளது. ‘இந்தியன் சென்சேஷன் 2014′ என்ற பெயரில் மலேசியா அரசு சுற்றுலாத்துறையுடன் இணைந்து நடத்தப்படும் இந்நிகழ்ச்சி வரும் மார்ச் மாதம் 29ம்தேதி அங்குள்ள ஸ்டேடியம் நெகாராவில் நடைபெறுகிறது.
பொதுவாக நடைபெறும் கலை நிகழ்ச்சியைப் போல அல்லாமல், வித்தியாசமான முறையில், ஒரு திரைப்படத்தைப் பார்க்கும் விதத்தில் இந்த கலை நிகழ்ச்சி உருவாக்கப்பட்டுள்ளது. 4 மணி நேரம் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில் ஆடல், பாடல் மட்டும் இன்றி, பல புதுமையான அம்சங்களும் உள்ளன, என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான டிரையங்கிள் ஈவெண்ட்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ ராஜபாண்டியன், ஜி.எச்.எஸ் சொலியூசன்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ சமீர், எப்3 நிறுவனத்தின் யோகேஷ் ஆகியோர் தெரிவித்தனர்.
ஏற்பாட்டாளர்கள் சுற்றுலாத்துறையின் பெயரைப் பயன் படுத்துகிறார்கள். அவ்வளவுதான். இவர்களையெல்லாம் சினிமாப் படங்களில் பார்க்கிறீர்களே போதாதா? இந்த அரை வேக்காட்டு நிகழ்ச்சிகளுக்கு ஆதரவு தராதீர்கள்!
என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை ?
இதனால் மலேசிய இந்தியருக்கு என்ன நன்மை ? கிடைக்கும் பணத்தில் இங்குள்ள கீழ் நிலையில் தத்தளிக்கும் நம்மவர்களுக்கு ஏதும் உதவுவார்களா? இல்லை முழுவதையும் சுருட்டிக்கொண்டு ஓடுவார்களா?