இலங்கை அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் ராஜ்கிரண்

rajkiranமுக்தா பிலிம்ஸ் என்டர்டெய்ன்மென்ட் பி. லிட்., பட நிறுவனம் சார்பாக முக்தா கோவிந்த், பிரியதர்சினி கோவிந்த் இணைந்து தயாரிக்கும் படம் ‘சிவப்பு’.

இந்த படத்தில் ராஜ்கிரண், நவீன் சந்திரா இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநாயகியாக ரூபா மஞ்சரி நடிக்கிறார். மற்றும் தம்பி ராமய்யா, செல்வா, போஸ் வெங்கட், ஏ. வெங்கடேஷ் , அல்வா வாசு, பூ ராம் ஆகியோர் நடிக்கிறார்கள். ‘கழுகு’ படத்தை இயக்கிய சத்யசிவா இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

இலங்கை அகதிகளின் உணர்வுகளையும், அவர்கள் வாழ்வில் உள்ள பல்வேறு சோகங்களையும் பதிவு செய்யும் படைப்பாக உருவாகி உள்ளது. இதில் ராஜ்கிரண் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ‘கோணார்’ என்ற கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார் ராஜ்கிரண். இவரின் கேரக்டர் படத்தில் மிக வலிமையான கேரக்டராக உருவாக்கப்பட்டுள்ளதாம்.

கட்டுமானத் தொழில் செய்து வரும் ராஜ்கிரண், இலங்கை அகதிகளுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி அடைக்கலம் கொடுப்பாராம். மேலும் படத்தில் நவீன்சந்திரா – ரூபாமஞ்சரி காதலும் கவித்துவமான சம்பவமாகப் படைக்கப் பட்டிருக்கிறது. படப்பிடிப்பு சென்னை,பாண்டி,ஹைதராபாத்,தூத்துக்குடி போன்ற இடங்களில் நடைபெற்றுருக்கிறது.