– முனைவர் ஆறு. நாகப்பன்
தமிழ்ப் பள்ளிகள் வேண்டுமா, வேண்டாமா என்ற இரண்டு முடிவுகளில் வேண்டாம் என்பதுதான் பாரிசான் அரசின் முடிவு. தேர்தல் என்ற ஒரு மாரடைப்பு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வந்துவிடுவதால் வேண்டாம் என்ற பாரிசானின் முடிவை நிதானமாக இந்தியர்களின் புத்திக்குள் திணிக்க வேண்டி இருக்கிறது. இதைத்தான் அரசு பல வியூகங்களில் செய்துகொண்டிருக்கிறது.
இதற்கான சான்றுகள்:
1.தமிழ்ப் பள்ளிகளை மேம்படுத்தும் பணிகளைத் திட்டமிட்டே தாமதப்படுத்துவதன் மூலம் தமிழ்ப் பள்ளிகளின் இயற்கை மரணத்தை ஊக்குவித்து வருகிறது.
2.பந்துவான் பெனோ, பந்துவான் மோடல் என்ற வேறுபாட்டைத் தொடர்ந்து காப்பாற்றி வருகிறது.
முழு உதவி பெறும் பந்துவான் பெனோ பள்ளிகளும் போதுமான வசதிகளைப் பெறுவதில்லை. பந்துவான் பெனோ பள்ளிகள் அரசு நிலத்தில் இருக்கிறது என்ற ஒன்றைத் தவிர இவற்றுக்கும் பந்துவான் மோடல் பள்ளிகளுக்கும் வசதிகளில் எந்த வேறுபாடும் இல்லை என்பதுதான் நடைமுறை.
3.தோட்டப்புறங்களிலிருந்து மக்கள் இடம் பெயரும்போது தமிழ்ப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைகிறது. அப்போது இந்தியர் குழுமி வாழும் இடங்களில் மாற்றுப் பள்ளிகள் அல்லது புதிய பள்ளிகள் அமைக்கப்படுவதே இல்லை.
4.இந்தியர் குழுமி வாழும் இடங்களில் உள்ள பள்ளிகளில் இடப் பற்றாக்குறை ஏற்படுவதை முன்கூட்டிக் கணித்துப் பள்ளிகளை விரிவாக்கம் செய்வது குறித்த திட்டங்கள் எப்போதும் இல்லை.
5.அண்மையில் மலாய்ப் பள்ளிகளுக்கு இல்லாத அறவாரியங்களைத் தமிழ்ப் பள்ளிகளுக்கு அமைக்கும்படி அரசு ஊக்குவித்து வருகிறது. இதற்கான உள்நோக்கம் என்ன என்பது குறித்து நாம் சிந்திக்க வேண்டும். தமிழ்ப் பள்ளிகள் மீது அரசுக்கு இருக்கும் சட்டபூர்வமான கடப்பாட்டையும் கை கழுவும் முயற்சியே இது.
6.தமிழ்ப் பள்ளிகளுக்குச் சூதாட்ட நிறுவனங்களைக் கொண்ட நிதி மையம் ஒன்றை அமைப்பது தமிழ்ப் பள்ளிகளைக் கை கழுவும் அரசு முடிவின் ஆகக் கடைசி முயற்சியாகும்.
7.தமிழ்ப் பள்ளிகள் பற்றிய அரசின் முடிவைச் செயல்படுத்தும் அதிகாரிகளாகப் பிரதமர் துறையில் இந்தியக் கல்வியாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். தமிழ்ப் பள்ளிகளைக் காப்பாற்றுவது போல் பேசும் இவர்கள் உண்மையில் அரசின் முடிவை இந்தியர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கிலான மனோவியல் அணுகுமுறையிலேயே செயல்படுகின்றனர்.
தமிழ்ப் பள்ளிகள் பற்றிய புள்ளிவிவரங்களைத் தயார்படுத்துகிறோம் என்றும் தேவைகளைப் பற்றி ஆய்வுகள் செய்கிறோம் என்றும் பிரதமர் துறை அதிகாரிகள் கூறுவது இந்தியர்களை ஏமாற்றும் கலப்படமில்லாத கயமைத்தனம். மலேசியத் தமிழ்ப் பள்ளிகள் மலேசியாவில்தான் இருக்கின்றன. மாநில கல்வித்துறையில் எல்லாப் புள்ளிவிவரங்களும் இருக்க வேண்டும். அவற்றின் தொகுப்பு கல்வி அமைச்சில் இருக்க வேண்டும். இணையத்தில் இவற்றைப் பெற அரை மணி நேரம் போதும். அப்புறம் என்ன ஆராய்ச்சி?
இரண்டு ஆண்டுகள் ஆராய்ச்சிக்குப் பின்னர் பல ஆண்டுகளாகப் பேசப்பட்ட விஷயங்களையே கண்டுபிடித்திருக்கிறார்கள். கண்டுபிடித்துப் பொதுமக்கள் காலங்காலமாக எதைக் கேட்டு வருகிறார்களோ அதையே இவர்கள் கோரிக்கையாகவும் வைக்கிறார்கள். இதையெல்லாம் கேட்கும் பிரதமர் என்ன சொல்லப் போகிறார் என்பதும் மலேசியர் எல்லாருக்கும் தெரியும். “பந்துவான் மோடல் பள்ளிகள் விரைவில் பந்துவான் பெனோ பள்ளிகளாக மாறுவதற்கு ஆவன செய்யப்படும். இருக்கும் பள்ளிகளை மேம்படுத்துவதற்கு நூறு மில்லியன் ஒதுக்கப்படும்.” இப்படிக் கூறப் போகும் பிரதமர் “இந்தியர்கள் தமிழ்ப் பள்ளிகளை மேம்படுத்துவதற்கு அரசாங்கத்தை மட்டும் எதிர்பார்க்கக் கூடாது” என்று புதிதாக ஒரு உபதேசத்தை இனி வரும் கூட்டங்களில் சொல்லுவார்.
மலாய்க்காரர்கள் மலாய்ப் பள்ளிகளை மேம்படுத்த அரசாங்கத்தை மட்டும் எதிர்பார்க்கக் கூடாது என்று சொல்லாத பிரதமர் இந்தியர்களைப் பார்த்து ஏன் அப்படிச் சொல்ல வேண்டும் என்று இந்த மகா மேதாவி ஆராய்ச்சியாளர்கள் பிரதமரைக் கேட்பார்களா?
கூட்டரசு அரசியல் அமைப்புச் சட்டம் 12(1) அரசு நிதிப் பகிர்வில் மதம், இனம், பூர்வீகம், பிறப்பு ஆகியவற்றின் அடிப்படையில் குடிமக்களிடையே எவ்வித பாரபட்சமும் காட்டக் கூடாது என்று இருக்கிறது. தேசியப் பள்ளிகள் அனைத்தும் அரசுப் பள்ளிகளாக முழு உதவியும் முழு வசதிகளும் பெற்றிருக்கும்போது தமிழ்ப் பள்ளிகள் மட்டும் தனியார் நிறுவனங்களின் நிதி உதவிக்குக் கையேந்தி நிற்பது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என்று இந்த ஆய்வாளர்கள் பிரதமருக்கு அறிவுறுத்துவார்களா?
தமிழ்ப் பள்ளிகளை மூட வேண்டும் என்ற அரசின் முடிவை பெர்காசா போன்ற மலாய் தீவிரவாத அமைப்புகள் பச்சையாகப் போட்டு உடைக்கின்றன. பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் இதே கருத்தை நாசுக்காக ஆய்வுச் சாயம் பூசிக் கூறுகின்றனர்.
இவ்வேளையில் தமிழ்ப் பள்ளிகள் மலிவுத் தொழிலாளர்களை உருவாக்குகின்றன என்றும் பள்ளியைப் பாதியில் விடுவோர் குற்றவாளிகளாக மாறுகின்றனர் என்றும் காரணம் காட்டித் தமிழ்ப் பள்ளிகளை மூட வேண்டும் என்று கூறும் அறிவாளிகளும் இருக்கின்றனர்.
தமிழ்ப் பள்ளிகளின் நிலைதான் சீனப் பள்ளிகளுக்கும். சீனர்களில் 95 விழுக்காட்டுக் குழந்தைகள் சீனப் பள்ளிகளுக்குப் போகின்றனர். தமிழ்ப் பள்ளிகளுக்குச் செல்லும் இந்தியக் குழந்தைகள் 56 விழுக்காடு. இந்தப் புள்ளிவிவரத்தின் அடிப்படையில் பார்த்தால் சீனர்களில்தான் அதிகமானோர் மலிவுத் தொழிலாளராயும் குற்றவாளிகளாகவும் இருக்க வேண்டும். அப்படியா இருக்கிறார்கள் அவர்கள்?
இந்தியர்களின் சமூகப் பொருளாதாரச் சீர்கேடுகள் என்னும் நச்சு வளையத்தில் தமிழ்ப் பள்ளிகள் இல்லை. இதன் பொருள்: இந்தியர்களின் சமூகப் பொருளாதாரச் சீர்கேடுகளுக்குத் தமிழ்ப் பள்ளிகள் பங்களிக்கவில்லை. காலங்காலமாக இந்தியர்கள் மீது நடத்தப்படும் இனவாதச் செயல்பாடுகளே அனைத்துக்கும் காரணம் என்பதைத் துணிந்து ஒப்புக் கொள்ள வேண்டும்.
அரசும் அரசின் கையாட்களும் தமிழ்ப் பள்ளிகளை மூட வேண்டும் என்னும் திட்டத்தை நமது எதிர்வினைகளுக்கு ஏற்றவாறு செயல்படுத்துவார்கள். தமிழ்ப் பள்ளிகளை மூடக் கூடாது என்ற நமது திட்டத்தை நாமும் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். இந்தப் போராட்டத்தில் இந்தியர்களின் சமூகப் பொருளாதார மேம்பாட்டுக்கான கோரிக்கைகளையும் உரிமைகளையும் இந்தியர்கள் மறந்துவிட வேண்டும் என்பதும் அரசின் மறைவான நோக்கமாய் இருக்கிறது என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.
இது தான் உண்மை நிலை. கல்வியாளர்களுக்குத் தான் உண்மை புரியும். நஜிப் எல்லாக் காலங்களிலும் நம்மை ஏமாற்றிக் கொண்டு தான் இருப்பார். ம.இ,கா,வும் அவருக்கு ஜே! போடும். நாம் தான் விழிப்போடு இருக்க வேண்டும்!
இந்தியர்கள் BN அரசுக்கு தொடர்ந்து வாக்கு அளித்தால் ! தமிழ் பள்ளி இயற்கை மரணம் அடைந்துவிடும் !
பிச்சை கேட்டால் பிச்சைதான் கிடைக்கும்! உரிமையை கேட்டால் உரிமை கிடைக்கும்! மயிலே மயிலேனா இறகு போடாது!
தமிழ் வேண்டும் தமிழ் பள்ளிகள் நிலைக்க வேண்டும் என்பதில் எந்த உணர்வுள்ள தமிழனுக்கும் மாறு பட்ட கருத்துக்கள் இருக்க முடியாது . அதன் முதல் படி தமிழரின் ஒற்றுமை .சொல் மட்டும் போதாது .செயல் வடிவம் வேண்டும்.வறிய நிலையில் உள்ள தமிழர்களை கல்வியிலும் பொருளாதார நிலையிலும் உயர்த்த ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும்.தலைவன் ,தலைமை என்ற சொற்களுக்கு இங்கு இடம் இல்லை. யாவரும் சமம்.
அறவாரியங்களும்/பள்ளி வாரியக்குழுவும் ஒன்றா?
முனைவரின் கட்டுரையில் பல உண்மைகள்…பல கால்ங்ககள் குமறிககொண்டு இருக்கும் கொடூரமும் கூட…நாட்டின் பெரும்பாலான மலாய் தேசியப்பள்ளிகள் பள்ளி வாரியாக்குழுவால் நிர்வாகம் நடந்து சிறப்பாகவே பண பட்டுவாடா பயணங்கள் இலக்கு நோக்கி போகின்கறன !
அங்கு அரசு சரா வாரியங்கள் இல்லை. பள்ளி வாரியக குழு என்பது அரசு சார்பு அமைப்பாகும் இது கல்வி அமைச்சின் அமைப்பின் பார்வையில் முறையாக நடக்கும் இயக்கமாகும். அறவாரியங்கள் என்பது வேறு .
இது நாள் வரை தமிழ்ப பள்ளிகளில் வாரிய குழுக்கள் இல்லை என்பதால் நாம் பட்ட நஷ்டங்கள் பல. இதற்குதான் தமிழ் அறவாரியம் குழு அமைத்து நாட்டில் உள்ள எல்லாத தமிழ்ப பள்ளிகளிலும் வாரிய ககுழு அமைக்கப்பட வேண்டும் என்று படும் பாடு பட்டு வருகிறோம்.
வாரியக் குழுவால் நமக்கு ஆபத்து என்ற கூற்று தப்பு.அரசு சரா அறவாரியங்கள் தமிழ்ப பள்ளிகளில் அமைவதுதான் ஆபத்து. அனால்
மலேசியா தமிழ் அறவாரியங்கள் போன்று பேரவை நிலையில் 523 தமிழ்ப்பள்ளிகளையும் கவனிக்கும் தார்மீக பொறுப்பு எல்லார்க்கும் வராது.இதற்கு தமிழ் அறவாரியம் மாநிலம் தோறும் அறவாரிய குழுமங்கள் அமைத்து செயல் படுவது பாராட்டப்பட வேண்டிய நடவடிக்கையாகும் ..இதற்கு தமிழ் அறவாரிய இன்றைய தலைவர் திரு பசுபதி ஐயா அவர்களை பாராட்ட வேண்டும்.
நாட்டின் தமிழ்ப பள்ளிகள் 90% அநாதை நிலங்களில் உள்ளது.இவைகளை உரிமம் பெரும் ஒரே இயக்கம் பள்ளி வாரியங்கள் எனும் LPS மட்டுமே.PIBG களுக்கு இந்த உரிமம் /உரிமை இன்னும் வழங்க சட்ட சரத்து ஏதும் இல்லை. ஆனால் ஒருவரின் தனி நிலம் PIBG பேரில் பத்தி செய்ய எந்த தடயம் இல்லை என்று நினைக்கிறேன்.
ஐயா இந்த விபரம் பொது தகவலுக்கு எழுதுகிறேன் ..தங்கள் கட்டுரையில் குறை காணும் எண்ணம் இல்லை. மன்னிக்கவும் ! உங்களை நான் மிகவும் மதிப்பவன், நன்றி.
தங்களின் கருத்துக்களை நானும் ஆதரிக்கின்றேன். உண்மைதான், கல்வி அமைச்சில் இல்லாத புள்ளி விபரங்களா!
கல்வி அமைச்சில், மாநில மற்றும் மாவட்ட ரீதியில் தமிழுணர்வுமிக்க தமிழ்ப் பள்ளி மேம்பாட்டு அதிகாரி ஒருவரை நியமித்து அவருக்கு உரிய அதிகாரமும், மரியாதையும், மதிப்பும் கொடுத்தாலே இன்னும் எவ்வளவோ பிரச்சினைகளைக் களைய முடியும்! எவ்வளவோ முன்னேற்றங்களைக் கண்டிருக்க முடியும்!
நம்பிக்கை வைப்போம் ….. நல்லது நடக்க ஆண்டவன் மீது நம்பிக்கை வைப்போம்!
முனைவர் நாகப்பன் அவர்கள் தமிழ்ப் பள்ளிகள் எதிர் நோக்கும் பிரச்சனைகளைப் பற்றி தொடர்ந்து எழுதிவருகிறார்.ஆனால் சம்பத்தப்பட்ட கல்வியாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் செவிகளுக்கு எட்டுகிறதா அல்லது எட்டியும் எட்டாதது போல் நடிக்கின்றனரா? “தமிழ் என் உயிர், தமிழை பலித்தவனைத் தாய் தடுத்தாலும் விடேன், உயிர் தமிழுக்கு உடல் மண்ணுக்கு என்று வாய் கிழிய பேசும் தமிழ்ப்பள்ளி வாரியப் பொறுப்பாளர்கள் பதவியில் இருக்கும் பொழுதே “ஏதாவது” உருப்படியாக செய்து விட்டு போங்கள்.இல்லையேல் உங்களையும் “பெர்காசா” போன்ற இனவாத இயக்கங்களின் ஆதரவாளர்கள் பட்டியலில் சேர்க்க வேண்டியிருக்கும். தந்தை காலம் முதல் இன்றைய தனையன் வரை அனைத்து பிரதமர்களும் தமிழ்ப்பள்ளிகளை சீர்ப்படுத்துவதற்கு எந்த முயற்சியும் மேற்கொண்டதில்லை. கூட்டரசு அரசியல் அமைப்பு சட்டம் 12 (1) எழுத்தளவில் மட்டுமே இருக்கும்.காரணம் கல்வி அமைச்சரோ அல்லது சம்பத்தப்பட்ட கல்வி “மான்” களோ இச்சட்டத்தைப் பற்றி அறியாதவர்கள். தொடரட்டும் அம்னோமயம்.
தமிழ்ப் பள்ளிகள் வேண்டுமா? வேண்டாமா?……என்பதை…..மலாய்ப் பள்ளிளுக்கும்…….
சீனப் பள்ளிகளுக்கும் அனுப்பும் பெற்றோர்களை திரும்பி பார்த்து கேட்க வேண்டிய கேள்வி …….முதலில் மலேசியா இந்தியர்களின் சிந்தனையில் மாற்றம் வேண்டும்……மலேசியா இந்தியர்களின் எண்ணிக்கையில் மாற்றம் வேண்டும் …..இந்த இரண்டு மாற்றங்கள் மட்டும் தான் தமிழ் பள்ளிகளின் தலை எழுத்தை மாற்றி அமைக்க முடியும் …..அதை விடுத்த அரசியல் அமைப்புகளும் …நஜிப் அரசாங்கமும் …அன்வரின் திமிரும் ….ஒரு முடியும் புடுங்க முடியாது…….மலேசியாவில் தமிழ் பள்ளிகள் இருக்கிறது என்பது மலேசியா மற்றும் உலக தமிழர்கள்ளுக்கு கிடைத்த மாபெரும் பொகிஷய்ம் ……..இதை மலேசியா இந்தியர்கள் காப்பாற்றுவது ஒவ்வொருரின் மலேசியா இந்தியர்களின் (இந்திய வம்சாவளிகளின்) கடமையாகும்…..
தமிழ் பள்ளி கண்டிப்பாக வேண்டும் 1) தமிழ்ப்பள்ளி ஆசிரியர், தலைமையாசிரியர்களுக்கு சோறு போட ,
2) அரசியல் வாதிகளுக்கு பெற்றோர் ஆசிரியர் சங்க வழி
விளம்பரம் கிடைக்க ,
3) அரசாங்க மானியங்களை கொண்டு கட்டிடம் கட்டுவதாக
கூறி கொள்ளை லாபம் அடிக்க .
4) 6 தமிழ் பத்திரிகைகள் 60ஆக மாற ,
5) தேர்தல் களங்களில் தமிழ் பள்ளிகளுக்கு மான்யம் கொடுக்கப் போகிறோம் என்று கூறி ஒட்டு வேட்டையாட .
6) மூட பழக்கங்களையும் , வாஸ்து சாஸ்திரங்களையும் ,ஜோசியத்தையும் நம்பி வாழ்நாட்களை விரயம் செய்ய .
7) நம்மவர்கள் எப்போதும் ஏமாளிகளாக இருக்க ,
8) ஜாதிகளை வளர்த்து ஆரியங்கள் நமது தொழில் சவாரி
செய்ய .
இந்த எட்டு வரிகள் தமிழ் மொழியை படித்தவனுக்கு
வராமலிருக்க , அவன் திருக்குறள் படிக்க வேண்டும் ,தமிழில் அறிவியல் படிக்க வேண்டும் ,வாழ்க்கை க்கு தேவையான பாடங்களை மட்டும் படிக்க வேண்டும் ,அப்படி படித்தல் தமிழ் கண்டிப்பாக நமக்கு தேவை நைனா .
இதைதான் நான் முன்பே சொன்னேன்! நமக்கு என்று தனி துல்லியமான கணக்கெடுப்பு தேவை! அம்னோ தில்லு முல்லு நிறைந்த மக்கள் தொகைக்கணக்கு நம்மை திசை திருப்பவே செய்த சதி! உதாரணதிற்கு ஒரு தைபுசம் போதுமானது! ஒரே நாளில் பல மாநிலங்களில் கூடும் மக்கள் தொகை,அதுவும் இந்துக்கள் மட்டுமே! மற்ற மதத்தினர்?….நாம் இந்நாட்டில் இன்னுமும் அடிமைகளாகதான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!
நான் பிறந்தது மூவாரில் உள்ள ஜெயம்கொண்டான் தோட்டத்தில் .அங்கு அந்த நாளில் தமிழ் பள்ளிக்கூடம் இல்லை .எனது ஏழை பெற்றோர் என்னை மூவாரில் உள்ள ஆங்கில பள்ளிக்கு அனுப்பினார்கள் .எனக்கு தமிழ் கற்க வேண்டும் என்ற ஆசை என் உள்மனதில் வேரூன்றி இருந்தது . ஐந்தாம் படிவம் வரை நான் தமிழ் படிக்க வில்லை . ஆனால் நான் ஒரு தமிழ் பள்ளி ஆசிரியர் ஆகா வேண்டும் என்ற தீ என் மனதில் கொழுந்துவிட்டு எரிந்தது .சொந்தமாக மனோன்மனி புத்தகம் வாங்கி படித்தேன் .எந்தஒரு ஆசிரியரையும் நான் நாடவில்லை .சுமார் மூன்று ஆண்டுகள் இதை செய்தேன் .பல முறை MCE தேர்வு எழுதினேன் .பல தோல்விகள் தமிழ் சோதனையில் .மீண்டும் மீண்டும் தமிழ் தேர்வு எழுதி ஒருவழியாக தமிழிலில் # CREDIT 3 பெற்றேன் . ஆனாலும் எனக்கு அப்பொழுது 1976 கோலாலும்பூரில் மருத்துவ ஆய்வு கூடத்தில் (IMR) பயிற்சிக்கு வாய்ப்பு கிடைத்தது .என்னுடைய ஆசிரியர் கனவு கனவாகவே போய்விட்டது குடும்ப சூழ்நிலையும் ஒரு காரணம்.பிறகு நான் தமிழ் இளைஞர் மனிமன்றதில் இணைத்து தமிழ் தமிழ் தொண்டு செய்தேன் .எங்களது வாசகம் # தமிழோடு உயர்வோம் #தமிழ் எங்கள் உயிர் # வீட்டில் தமிழ் பேசுங்கள் #தமிழனிடம் தமிழில் பேசுங்கள் # தமிழ் பள்ளிகூடங்களை பாதுகாப்போம் # தோட்டப்புற தமிழ் பள்ளி மாணவர்களுக்கு உதவி கரம் நீட்டுவோம் ………இன்னும் பல .எனது மகள் BSC படித்தாலும் அவர் தமிழ் பள்ளியில் ஆசிரியராக வேண்டும் என்று கனவு நினைவானது . தமிழ் பள்ளியில் உழைத்தால் அந்த அன்னை சரஸ்வதி நலம் காப்பார் .இது எனது வாழ்க்கை பாதையில் கடந்து வந்தவை .தமிழ் பள்ளிகள் கண்டிப்பாக வேண்டும் .யாரும் அதை அழித்துவிடமுடியாது .தமிழ் எங்கள் உயிர் மூச்சு .தமிழை பழிப்பவனை தாய் தடுத்தாலும் விடாதே . தமிழை மறப்பவன் தன் தாயை மறந்தவன் .தமிழ் பள்ளி ஆசிரியர் பெருமக்களுக்கு எனது வணக்கம் .வாழ்த்துகள் .தமிழ் தொண்டு செய்ய
கொடுத்துவைத்தவர்கள்.இந்த நாட்டில் உள்ள பணக்காரர்கள் தயவு செய்து தமிழ் பள்ளிக்கு உதவிக்கரம் நீட்டுங்கள் .தமிழ் பள்ளிகள் இல்லை endraal தமிழன் இல்லை , அடிமை விலங்கை உடைப்போம் . எழுத்து பிழை இருந்தால் மனிக்கவும் ,அன்புடன் தமிழன் .
முனைவர் 1990களில் கல்லூரிகளில் விரிவுரையாளராக இருந்தவர். தமிழ்க்கல்வி பற்றி நன்கு அறிந்தவர். தமிழும் சமயமும் இரு கண்ணாக போற்றியவர். எல்லாம் சரி ஆனால், அவர் கூறுவதில் சில கருத்துகள் விவாதிக்கப்பட வேண்டியவை. குறிப்பாக, தமிழ்ப் பள்ளிகளின் இயற்கை மரணத்தை அரசு ஊக்குவித்து வருகிறது. என்பதைப் பற்றி… நம்மில் 56% மட்டுமே தமிழ்ப்பள்ளி விரும்பிகள். மீதம் இருப்பவர்கள் தமிழ்ப்பள்ளிகள் எவ்வளவு மேம்பாடு கண்டிருந்தாலும் அதைபப்ற்றி நினைத்துக் கூட பார்க்க மாட்டார்கள். காரணம் அம்னோ அரசு.? 523 தமிழ்ப்பள்ளிகளில் 523 தலைமைத்துவங்கள் உள்ளன. அவர்களை அம்னோ அரசுதான் பதவிதான் பெரியது சமூக அக்கறை தேவையில்லை என்று சொன்னதா? 8 ஆயிரம் ஆசிரியர்களில் பலர் தரமில்லாதவர்களாக கூலிக்கு மாறடிக்கச் சொன்னதா? 3 கிரேடில் ஆசிரியர் ஆக விரும்புபவர்களுக்கு தற்காலிக ஆசிரியர் பதவிக்காக கவடி தூக்கி தமிழ்க்கல்விக்கு சாவு மணி அடிக்க சொன்னதா? எதிலும் ஒரு நியாயாம் வேண்டாமா? முனைவர் அவர்கள் தம் 20 ஆண்டு கால இடைவெளியை /இயலாமையை நிவர்த்தி செய்ய அவ்வப்போது தம் பழைய ஊதுகுழல் கொண்டு மக்களை கவரும் வகையில் உசுப்பிவிடுகிறார்.
நண்பர்களே,நாம் பேசி கொண்டே இருக்கின்றோம் ஆனால் செயல் வடிவம் மட்டும் நம்மிடம் இல்லை அதற்கு காரணம் அரசியல் ரீதியாக நாம் பிரிந்து போய் பல காலமாகிறது என்பதே உண்மை,ம.இ.கா கொண்டு வரும் திட்டங்களை பக்காதான் இந்தியர்கள் ஏற்க மறுக்கின்றார்ர்கள்,பக்காதான் கொண்டு வரும் திட்டங்களை ம.இ.கா இந்தியர்கள் ஏற்க மறுக்கின்றார்கள் அப்படியே ஓரளவிற்கு ஒற்று போனாலும் ஐ.பி.எப்,பி.பி.பி.,நீதி கட்சி,மக்கள் சக்தி,ஹிண்ட்ராப் இப்படி பெயர் தெரியாத நூறு கட்சிகளில் இருக்கும் இந்தியர்கள் ஏற்க மறுக்கின்றார்கள் என்னதான் நடக்கின்றது என்பதை தெரியாமல் வெளியே அப்பாவி தமிழன் நின்று கொண்டு அவன் அவன் வேலையை செய்து கொண்டு போய் கொண்டே இருகின்றான் எனபதே உண்மை.
இங்கே நான் ஒரு உண்மையை பரிமாறி கொள்ள ஆசைப்படுகின்றேன் நான் ஒரு பத்திரிக்கையாளன் என்பதினால் என் கருத்தை இங்கே பதிவு செய்ய விரும்புகின்றேன்.
ஒரு நிகழ்ச்சியில் நான் போய் செய்தி சேகரித்து கொண்டு இருக்கும் பொழுது ஒரு டத்தோ பட்டம் பெற்ற மலையாளி ஒருவரை சந்தித்து உரையாட வேண்டியிருந்தது அவர் மலையாளிகள் சங்கத்தில் ஒரு முக்கிய பொருப்பாளர் அவரிடத்தில் தமிழ்ப்பள்ளிகளில் நிலையை பற்றி பேசி கொண்டு இருந்த பொழுது அவர் கூறிய பதிலை கேட்டு நான் சிலையாக நின்றேன்.
அதாவது நாங்கள் மலையாளிகள் எங்கள் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் காரணம் எங்கள் தாய் மொழி மலையாளம் என்று கூறினார்.
அடுத்து மற்றும் ஒரு நிகழ்ச்சியில் ஒரு தெலுங்கரை சந்தித்து இதை பற்றி கூறும் பொழுது நன் ஒரு தெலுங்கர் என் தாய் மொழி தெலுங்கு என் பிள்ளைகளை நாங்கள் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புவது இல்லை எங்கள் சங்கத்தினிலேயே தெலுங்கு கற்று தருகின்றோம் என்றார்.
அடுத்து ஒரு நிகழ்ச்சியில் ஒரு டத்தோ பட்டம் பெற்ற ஒரு அரசியல் கட்சியின் சேர்ந்த ஒரு இந்திய முஸ்லிம் தலைவரை பேசிய பொழுது அவரும் நான் முஸ்லிம் என் மொழி தமிழ் தான் ஆனால் நாங்கள் எங்கள் சமுகத்தை சேர்ந்தவர்கள் தமிழ்ப்பள்ளிகளுக்கு பிள்ளைகளை அனுப்ப மாட்டோம் காரணம் அங்கே சரஸ்வதி பூஜை தேவாரம் நடத்துகின்றார்கள் நாங்கள் எங்கள் மசூதிகளிலேயே தமிழ் கற்று தருகின்றோம் என்று கூறினார்.
அடுத்து ஒரு கிருஸ்தவ நண்பரை சந்தித்த பொழுது அவர் நான் கிருஸ்தவன் என் பிள்ளையை நான் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்ப மாட்டேன் என்று மிக உறுதியாக கூறினார்.
இங்கே ஒரு விவரம் எனக்கு புரியவில்லை தவறாக இருந்தால் திருத்தம் செய்யவும்.
நாட்டில் நாம் 22 லட்சம் இந்தியர்கள் என்று எங்கேயோ படித்த ஞாபகம்,அதில் 2 லட்சம் தெலுங்கினர்கள்,3 லட்சம் மலையாளிகள்,5 லட்சம் கிருஸ்தவர்கள்,1 லட்சம் சீக்கியர்கள்,6 லட்சம் முஸ்லிம்கள் மொத்தம் 17 லட்சம் இந்தியர்கள் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புவது இல்லை என்று உறுதியாக இருக்கின்றனர் அதில் ஒன்று ரெண்டு அனுப்பலாம் மீதம் உள்ள 5 லட்சம் பேர் தமிழ் பேசுபவர்கள் அதில் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புவது வெறும் 56 சதவிதமே அதாவது 2.8 லட்சம் தமிழர்கள் மட்டுமே மீதம் உள்ளவர்கள் மலாய் பள்ளி சீன பள்ளியில் சேர்த்து தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்கின்றனர்.
ஆக 2.8 சதவிதத்தை நம்பியே 523 பள்ளிகளை நடத்த வேண்டியுள்ளது அதிலும் திடீர் திடீர் என்று சில இந்திய தலைவர்கள் தமிழ்ப்பள்ளியில் படிப்பவர்களால்த்தான் வன்முறையி ல் அதிகம் ஈடுப்படுவதாகவும் தமிழ் ஆசிரியர்கள் திறன் இல்லாத போதனை முறையை கையால்கின்றார்கள் அதனால் தமிழ்ப்பள்ளிகளை மூட வேண்டும் என்று பத்திரிக்கை வாயிலாக கோரிக்கை வைக்கின்றனர்.
இதில் என்ன ஒரு வேடிக்கை என்ன வென்றால் எந்த ஒரு தமிழ் ஆசிரியர்கள் சங்கமும் இது வரை வாயை திறக்கவே இல்லை தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கமும் வாயை மூடி கொண்டே இருக்கின்றது.
இதில் ஒன்று ரெண்டு பேர் காட்டு கத்தாக கத்தி கொண்டு இருக்கின்றோம் தமிழ்ப்பள்ளிகளை அவமதிக்காதே,நீ எப்படி இப்படி பேச முடியும் என்று !! ஆனால் செயலில் யாரும் ஈடுப்படுவதும் கிடையாது தட்டி கேக்க வேண்டிய சமுதாய தலைவர்கள் அரசியல் பிரமுகர்கள் மானியத்தை மட்டும் குறி வைத்து காத்திருக்கும் பொது அமைப்புகள் ,அரசு சாரா இயக்கங்கள் கூட தெரியாதது போலவே உள்ளது.
இன்னும் சில அரசியல் தலைவர்கள் இதை சொன்னது நாட்டில் பிரபலமான தமிழர்கள் வாங்கி ஆதரவு தரும் மக்கள் ஓசை பத்திரிக்கையின் உரிமையாளரும் ம.இ.கா மத்திய செயல் குழு உறுப்பினருமாகிய சுந்தர் சுப்ரமணியம்,அவரை எதிர்த்து எந்த அரசியல் தலைவரும் பேச மாட்டேன் என்று கூறி விட்டனர் காரணம் நாளை இவர்களை பற்றி செய்தி போட மாட்டாங்களாம் என்னையா இது ?!! கேவலமா இல்லை ??
நாம் யோசிக்க வேண்டிய நேரம் இது தமிழ்ப்பள்ளிகள் ஆபத்தான கட்டத்தில் இருக்கின்றது என்பது உண்மை தமிழ்ப்பள்ளிகளுகாக பல போராட்டங்கள் நடந்தாலும் மறைமுகமாக ஆதரவு தர வேண்டிய தமிழ் ஆசிரியர்கள் அதிகமானோர் நாட்டில் என்ன நடக்கின்றது என்றே தெரியாமலும் ஆதரவு தராமலும் அதை பற்றி பேச கூட மாட்டேன் என்றும் இருக்கின்றார்கள்.
இதில் ஒரு வேடிக்கை 99 சதவித தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தமிழ்ப்பத்திரிக்கை வாங்குவதும் இல்லை படிப்பதும் இல்லை.
இது எப்படி இருக்கு.
உங்கள் கருத்தை பகிருங்கள் ஒரு நிருபராக ஒரு பத்திரிக்கையாளனாக இது என் கருத்து மட்டுமே.
வாழ்க, வளர்க தமிழர் சரவணன். தங்கள் விடா முயற்ச்சியும், தமிழ் பற்றும் மற்ற தமிழர்களுக்கு எடுத்துக் காட்டாக இருக்கட்டும்.
தம்பி, தமிழா! உனது ஆர்வத்தை மனதாரப்பாராட்டுகின்றேன். உன்னைபோல் ஒவ்வொரு தமிழனும் வாழ்ந்து விட்டால், நமக்கு பேரின்பம்தானே. இதற்காக தானே நமது முன்னேர்களும், சான்றோர்களும் கனவு தேங்கிய உள்ளத்தோடு வாழ்ந்தனர். வெள்ளி நிலவாக இருங்கள்; யாரையும் கண்ணீரில் நனைத்து விடாமல் எழுதுங்கள். எழுத்து உங்களை அடையாளம் காட்டும்.
தமிழின அறிஞர் டாக்டர் அறு. நாகப்பன், ஆசிரியராக வாழும் காலத்திலிருந்தே தமிழ்ப்பள்ளிகளின் நிறை குறைகளை அலசி ஆராந்து துணிந்து பல இடங்களிலும் பேசியும் எழுதியும் எழுதி வந்ததையும் நானறிவேன். ஆனால், சிலர் பேராசிரியர் என்றப் பெயரில் அரசியல் அடைக்கலம் பெறவே பலதிட்டங்கள் அரசாங்கம் வைத்திருப்பதாக, சதாசர்வ காலமும் அறிக்கை விட்டுக் கொண்டே மாதசம்பளம் வாங்கி உண்பவர்களும் உண்டு. அறு. நாகப்பன்சார் மேலே உள்ள கட்டுரையில் குறிப்பிட்ட செய்திகளைப் படித்தால், தமிழ்ப்பள்ளிகளின் மீதுள்ள நாட்டு நடப்புகளை உணர்ந்து கொள்ளலாம். சிலரின் தேர்தல் காலத்தின் மாயஜால பேச்சுகளையும் உணர்ந்து கொள்ளலாம். மேலே உள்ள கட்டுரை எனக்கு ஒன்றை உணர்த்துகின்றது. என்னவென்றால், நம் தேசம் சுதந்திரம் பெற்று விட்டது என்பதைக் 31 ஆகஸ்ட்டு என காலண்டர் மட்டுமே சொல்லிக் கொண்டிருந்தால் போதாது என்பதற்கு அவரின் கட்டுரைகள் நல்ல விளக்கம் உண்டு.
எவ்வளவு கொடுத்தாலும் இந்த தலைமை ஆசிரியர்களுக்கு பொதுமமதக இருக்காது………………. நமக்கு வைத்தவர்கள் அப்படி.
குமார் அவர்களே, தங்களின் வினாவுக்கு பதில். (1) தமிழ் பள்ளியில் இருந்து படித்து இடைநிலைக்கு போகும் நம் பிள்ளைகளுக்கு மாவட்ட கல்வி இலாக்கா இடம் வழங்கும் பள்ளி “கல்வி தரத்தில் பின் தங்கிய பள்ளிகள்”. தங்களுக்கு ஆதாரம் வேண்டுமானால் மீண்டும் எழுதுங்கள். ஆதாரத்தை தருகின்றேன். இதனை தவிர்க்கவே, தங்கள் பிள்ளைகள் பேர்பெற்ற இடைநிலை பள்ளிக்கு போக வேண்டும் என்ற நப்பாசையில், ஆரம்பக் கல்வி பயில தேர்தெடுத்த மலாய் பள்ளியில் சேர்கின்றனர் தமிழ் பெற்றோர்கள். இது அம்னோ அரசாங்கத்தின் வேலை அல்லவென்றால் எவன் அப்பன் செய்த திருகுத் தாளம்? தொடரும்.
கேள்வி (2). பதில். 523 தலைமைத் துவங்களில் அம்னோ அரசாங்கத்தை எதிர்த்து ஒருவராவது சமூக நலனைப் பற்றி வெளிப்படையாக பேச முன் வருகின்றார்களா? எல்லோரும் தத்தம் சுயநலத்துக்காக வாய் மூடிக் கொண்டு மாநில கல்வி இலாக்கவும், மாவட்ட கல்வி இலாக்காவும் சொல்வதையே கிளிப்பிள்ளையாக கேட்டுக் கொண்டு வந்து நம்மிடம் ஒப்புவிக்கின்றார்கள். இவையெல்லாம், கல்வி இலாக்காவுக்கு கட்டுப்படு இல்லையேல் விட்டு ஓடு என்ற அம்னோ அரசாங்கத்தின் தாரக மந்திரத்தினால். இந்நாள் கல்வி அமைப்பை நன்கு தெரிந்து வைத்திருக்கும் குமார் அவர்களே இதை தாங்கள் அறியாமல் போனது எப்படி?
கேள்வி (3). பதில். 3-வது நிலையில் எஸ்.பி.ம். தேர்வில் தேர்வாகி ஆசிரியர் பயிற்சி கொடுத்துதான் நம்மவர்கள் ஆசிரியர் தொழிலில் சேர்ந்தனர். இவ்வாறு “ஆசிரியரை” உருவாக்கியவர்கள் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி “விரிவுரையாளர்கள்” அல்லவா? இந்த ஆசிரியர்கள் தரமில்லை என்றால் அந்த விரிவுரையாளர்களும் தரமில்லை என்றுதானே ஆகும். அம்னோ அரசாங்ககத்தால் நியமனம் பெற்ற அந்த விரியுரையாளர்களும் தரமில்லை என்றால் நீங்கள் ஏற்றுக் கொள்வீரா? இந்த ஓய்வுகால ஆசிரியர் பயிற்ச்சியும் இப்பொழுது நிறுத்தப் பட்டு விட்டது என்பதை நீங்கள் அறியவில்லையா குமார்?
குமார் அவர்களே உங்களுக்கு ஒரு கேள்வி. இன்று எஸ்.பி.ம். தேர்வில் குறைந்த பட்சம் 7 A -க்கள் எடுத்தால்தான் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு விண்ணப்பம் செய்ய முடியும் என்று தகுதி போட்டு விட்டது கல்வி இலாக்க. 7 A பெற்ற தமிழ் பயின்ற மாணர்கள் பெரும்பாலும் கவர்ச்சியற்ற ஆசிரியர் தொழிலுக்கு வரப் போவதில்லை. இதனால் எதிர் வரும் காலங்களில் தமிழ் ஆசிரியர் பற்றாக்குறை வரும். வருவதைத் தடுக்க இயலாது. முடிந்தால் இதற்க்கு தங்கள் ஆலோசனையை அல்லது கருத்தை தெரிவிக்கவும்.
உங்கள் அனைவருக்கும் நன்றி.முனைவர் ஐயா ஆறு .நாகப்பன் அவர்கள் மிக தெளிவான விளக்கம் தந்துள்ளார் .தோட்டப்புறத்தில்(nilai) பிறந்து அங்குள்ள நிலவரத்தை நன்கு அறிந்து ஆராய்ந்து தெளிவாக எழுதிஉள்ளார் .இவரைப்போல் துணிவு வேண்டும் .கல்வி அமைச்சில் இவரை போன்ற அறிஞர்கள் அறிவாளிகள் தேவை .அபோழுதுதான் தமிழ் பள்ளிகள் தொடர்பான சரியான தகவல் திரட்ட முடியும் .
எல்லாம் சரிங்க சார்! அடுத்து என்ன செய்தால் நமக்கு நன்மை பயக்கும் என்று நல்லதொரு செயல் திட்டத்தை வரையுங்கள்.
குறைந்தபச்சம் அடுத்த தலைமுறை தமிழ் மொழி தேவைகளை பாதுகாக்க வழிகள் கண்டறிய வேண்டும்.அரசை நம்பினால் நாமம்தான் மிஞ்சும்! Let’s plan our work and work our plan!
அரசியல் அமைப்புச் சட்டம் 12(1)ஐச் செயல்படுத்த வேண்டும். மலாய்ப் பள்ளிகளைப் போன்றே தமிழ்ப் பள்ளிகளைப் பராமரிப்பது அரசின் பொறுப்பு. அரசுக்கும் தமிழ்ப் பள்ளிகளுக்கும் இடையில் தரகர்கள் வேண்டாம். இதுவே அம்னோ அரசுக்கு நாம் சொல்ல வேண்டிய செய்தி. இது குறித்த தமிழ்க் கல்விக் கருத்தரங்கு ஒன்று விரைவில் கூட்டப்பெற்று தமிழ்ப்பள்ளிகள் பற்றிய உண்மைகள் வெளிப்படுத்தப்படும்.
புலி கொடி வேந்தரே, தங்களின் செய்தி எம் மனதை கணக்க வைக்கின்றது. பட்டணத்தில் இருக்கும் தமிழ் பள்ளிகளுக்கு மேலும் தலைவலியை கொண்டு வந்து சேர்த்திருக்கின்ரார்கள் நம் மதிப்பிற்கும் மாண்புக்கும் உரிய கிறிஸ்துவ தமிழர், முஸ்லிம் தமிழர் எனப்படுவோர். பட்டணத்தில் உள்ள ஒரு தமிழ் பள்ளியில் தமிழ் மாணவர்களுக்கு சமய கல்வி போதிக்க வேண்டி ஒரு பாட நேரத்தை காலையில் ஒதுக்கி வகுப்பு நடத்தினார்கள் பள்ளி ஆசிரியைகள். கிறிஸ்துவ தமிழர், முஸ்லிம் தமிழர் எனப்படும் மாணவர்களை தனித்தொரு வகுப்பில் வைத்து விட்டுதான் நடந்தது. இதை பொறுக்காத கிறிஸ்துவ தமிழர் எனப்படும் பெற்றோர் இந்த ஒரு பாட நேரம் எம் மத மாணவர்களுக்கு வீணடிக்கப் படுகின்றது என்று மாநில கல்வி இலாக்காவில் புகார் செய்து இன்று அப்பள்ளியில் பாட நேரத்தில் நடத்தப் படும் சமய வகுப்பு நின்றுள்ளதாக அறிகின்றேன். கலைமகள் போற்றிப் பாடலை காலையில் பாடி விட்டுதான் படிப்பைத் தொடங்கியது எம் பள்ளிக் காலம். இன்றோ தமிழ் பள்ளியில் மற்ற மத மாணவர்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்பளித்து கலைமகள் தமிழ்ப் பள்ளியை விட்டு போய் விட்டாள். மிஞ்சியது தமிழ் வாழ்த்துப் பாட்டு. அதுவும் எத்தனை நாளைக்கோ தெரியாது. தமிழர்கள் அன்பானவர்கள், பண்பானவர்கள், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மைக் கொண்டவர்கள். இறுதியில் கட்டிய கோவணத்தோடு செல்பவர்கள் என்பதை செயல் வடிவமாக நிருபித்து வருகின்றோம் தமிழர் என்னும் ஏமாளிகள். கோடரி கம்புகளோ, நம்முடைய ஆணி வேரையே பிடுங்க ஆலாப்பரகின்றார்கள். வேண்டும் என்றால் இன்னும் எழுதுகின்றேன். யாராவது சீண்டினால். . .
இறைவன் அருளால் கருத்தரங்கு தேதி,நேரம்,இடம் போன்ற தகவல்களை விரைவில் எதிர்பார்க்கிறோம், மிக்க நன்றி சார்.
பினாங்கு அரசாங்கம் தமிழ் இடைநிலைப் பள்ளியை நிருமாணிக்க நிலம் தந்து, அதை வழி நடத்திட வேண்டி கேட்ட மனுவை அம்னோ அரசாங்கம் நிராகரித்துள்ளது என்பது இன்றைய செய்தி. இந்த மனுவுக்கு இந்தியர்களைக் கொண்டு செயல்படும் எந்த ஒரு அரசியல் கட்சிகளும் ஆதரவளிக்க முன்வரவில்லை என்பது வருந்தத் தக்கச் செய்தி. தமிழை மெல்ல மெல்ல சாகடிக்க கண்ணில்லாத கபோதி கட்சிகளெல்லாம் ஒன்று கூடி அம்னோவுடன் கூட்டணி அமைத்து செயல்படுகின்றனர் என்பது கண்கூடு. இதையும் அறியாது அம்னோவுக்கு வக்காலத்து வாங்குபவனை வள்ளுவன் எப்படி குறிப்பிடுகின்றார் என்று கொஞ்சம் எடுத்துச் சொல்லுங்கள் ஜெகவீரபாண்டியரே.
லட்சக்கணக்கில் ஆலயங்களுக்கும் +ஆலய ரதங்களுக்கும்+திருமண மண்டபங்களுக்கும்+சினிமாக்காரர்களின் கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கும் கொட்டிக்கொடுக்கும் பணத்தை ஒருமுகப்படுத்தி நமக்கு நாமே ஒரு சுயநிர்மாணிப்பை ஏன் உருவாக்கிடக்கூடாது. இனியும் அரசால் நமக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை என்பது தெள்ளத்தெளிவாகவே பல செயல்பாடுகள் மூலம் அரசு பூடகமாக செயல்படுத்தி உணர்த்திக்கொண்டுதானே வருகிறது. புலம்பெயர்ந்துபோன ஈழத்தமிழர்கள் வெவ்வேறு நாடுகளில் வழ்ந்தாலும் அவர்களெல்லாம் த்ங்களுடைய வாழ்வாதாரத்தை கெட்டியாகப் பிடித்துக்கொள்ளமுடிகிறதே! ஏன், மலேசிய சீனர்களால் முடிகிறதே! இதிலிருந்து நமக்கு ஒன்றுமட்டும் தெளிவாகப் படுகிறது. நம்மை ஏமாற்றுவது அரசு அல்ல. நமக்கு நாமேதான்.
இதில்பெரும்பங்கு வகிப்பது தமிழ் ஊடகங்களும் அரசியல் பணக்காரர்களும்தான். ஆடுகளைப்போல் சத்தம் போட்டுக்கொண்டு பலிகடாவாது நாம்தான் என்பதை எப்போது புரிந்துகொள்ளப்போகின்றோம்.
ஐயா, தேனீ அவர்களே! நீங்கள் கூறியத்து முற்றிலும் உண்மை. ஆரம்பக் காலத்தில் நான் பேராக் செங்கட் சாலாக் தமிழ்ப்பள்ளியில் படித்திருந்த போது, காலையில் எல்லாமாணவர்களும் ஒன்றுகூடி இறைவணக்கம் பாடுவோம். அப்போது சீனமாணவர்கள் அப்பிங், ஆலோய்தாங், , மலாய் மாணவர்கள் முகமட் அலி, அசான், மாஜீட், இந்திய முஸ்லிம் மாணவர் அனிப்பா, கிறிஸ்துவ மாணவரான பிரான்ஸிஸ் எல்லோரும் சேர்ந்து சாவத்திரி கலைவாணியே எனும் பாடளும், அம்மாவும் நீயே அப்பாவும் நீயே முருகா எனும் பக்தி பாடலைதான் பாடிவிட்டு வகுப்பறைகளுக்கு செல்வோம். இன்று அவர்கள் நீதிபதியாக, தொழிலதிபராக பினாங்கிலும் ஈப்போவில் வாழ்கின்றார்கள். இன்று எந்தப்பாவியோ இட்டத்தீயில் சாதி இனவாதம் பேசி திரிகின்றோம். தமிழனாய் இருந்தவன் மதம் மாறிய பிறகு தமிழனுக்கும், தமிழுக்கும் கொல்லிவைப்பதே தொழிலாகப் போச்சு. விதி விலக்காக இன்னும் சில நல்லுள்ளங்கள் கொண்டவர்கள் தமிழுணர்வோடு வாழ்கின்றார்கள். இனவாதிகளுக்கு ஒன்றைச் சொல்கின்றேன், வாழ்க்கைத் தொடர் ஓட்டத்தில் தீபம் கைமாறிவிட்டது என்பதுதான் உண்மை.இனி நீங்கள் சலுகை நாட்களிலேதான் சஞ்சரிக்கின்றீர்கள் என்பதை உணருங்கள்; மறந்து விடாதீர்கள். மதங்கள் மாறிய தமிழன்தான் தமிழுக்கு பெருந்தீங்கிளைக்கின்றான் என்பதை கண்ணாடியில் முகம் பார்பதைப்போல் தெரிகின்றது.
பள்ளியில் சமய வகுப்பு நடத்தி நேரத்தை வீனடிப்பதைவிட,தமிழ்
வாழ்த்து பாடி (எல்லா சமய மாணவர்களுக்கும் ) கூடுதல் கணித
பாடம் கற்றால் மாணவர்கள் பயன் பெறுவார்கள். சமயத்தை புகுத்தி
தமிழ் இஸ்லாம் ,தமிழ் கிறிஸ்துவ மாணவர்களை பள்ளிக்கு வர
முடியாமல் செய்து விட்டார்கள்,அப்படி இருந்தும் ஓரிருவர் தமிழ்
பள்ளிக்கே அனுப்பும் பெற்றோர்களை கண்டேன்,உண்மையிலே
அவர்கள் தமிழ் பற்றாளர்கள் என்று கண்டு கொண்டேன்.
புலி கொடி வேந்தன் நண்பர் அவர்களே…..நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை…..நான் உங்களுக்கு இன்னும் ஒரு வரலாற்று உண்மை எடுத்துரைக்க விரும்பிகிறேன் …..துன் டாக்டர் மகாதிர்…..இன வெறியன்…..வெற்றி பெற்ற ஒரு உண்மை கதை…..துன் டாக்டர் மகாதிர் மலேசிய பிரதமரான பிறகு அவர் முதலில் செய்த வேலை மலேசியர்களை ஒன்றிணைத்தார்…!!! எப்படி ???? துன் டாக்டர் மகாதிர் எடுத்த ஆயுதம் மொழி….தேசிய மொழி ….மலாய் மொழி……அந்த காலத்தில் மலேசியர்கள் பல பிரிவுகளாக பிரிந்து இருந்தார்கள்…..துன் டாக்டர் மகாதிர் எடுத்த முடிவு அதாவது அணைத்து மலேசியா குடி உரிமை பெற்றவர்கள் யாவரும் கட்டாயமாக மலேசியா/தேசிய மொழியை கற்று தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்….. இந்த ஒரு மொழி ஆயுதம் மலேசியர்களை இனம், மதம், மொழி ஆகியவற்றில் வேற்றுமை அடைந்திருந்த மலேசியர்களை ஒன்றிணைத்தது……அதே போல நமது இந்திய வம்சாவழிகளையும் இணைக்கும் ….ஒன்றிணைக்கும் வலிமை மொழி …தமிழ் மொழிக்கும் கட்டாயம் வலிமை உண்டு ……இந்த ஒரு கூற்றை அரசியல் வாதிகள் …இந்திய பொது நல இயக்கங்கள் …..தனி மனிதர்கள் ….யாவரும் புரிந்து கொள்ளும் வகையில் அறிமுகம் ஒன்று தேவை…..
காரணமில்லாமல் காாியமில்லை,குறிப்பிட்ட எண்ணிக்கை கொண்ட பள்ளியா/தரம் கொண்ட பள்ளியா,எஸ்.பி.எம்,7ஏ தகுதி கொன்டவர் பள்ளி ஆசிாியர் தொழிலுக்கு வருபவர்,கட்டாயம் சிறந்த மாணவா்களை உருவாக்குவா்,அதனை தொடா்ந்து பெற்றோா்கள் மனமுவந்து பிள்ளைகளை நம் பள்ளியில் சோ்ப்பா்.தகுதி பெறாத தகுதியற்ற பலர் ஆசிாியா் தொழிழ் கடமைக்கு பள்ளிக்கு வந்து போவதால் மாணவா்களை கட்டாயம் டியூஷன் வகுப்புக்கு அனுப்பவேண்டிய சூழலில் தவிக்கின்றனா் பெற்றோர்கள்.ஒரு பத்திரிகை ஆசிரியர் ஆதங்கம்,எந்த தரப்பிலும் ஒத்துழைப்பு கிடையாது(பள்ளியில்),மற்றும் தரமற்ற அசிரியரானாளும் நடத்தவேண்டிய சூழலில் தமிழ் பள்ளியின் அவளம் போன்ற கருத்து பெற்றோறிடையே அதிருப்தியை ஏற்படுத்துவதாக உள்ளதை சற்று கவணிக்கவும் தோழரே.பள்ளியில் தெய்வங்களின் சரஸ்வதி வணக்கத்தை திருக்குறலில் இருந்து எடுத்து பயன் படுத்தலாமே.உம் தமிழ் பற்று எம்மை திகைக்க வைக்கிறது,வாழ்க உம் தமிழ் தொண்டு.நாராயண சமர்பணம்.
இந்த நாட்டில் நாம் ஏழைகளாக இருக்கலாம் அனால் கோழைகள் இல்லை .கடந்த 60 ஆண்டுகளாக நம்மை ஓரங்க்கட்டுவதிலே கண்ணும் கருத்துமாக இருகிறார்கள் . தமிழ் பள்ளிக்கூடங்களை எந்த வேளையிலும் விட்டுக்கொடுக்க முடியாது .தமிழ் பள்ளிகளை அழிக்க நினைத்தால் அழிந்துபோவார்கள் .ஒவ்வொரு தமிழனும் இதை மனதில் நிலைநிருதவேண்டும்.## சாவிலும் தமிழ் படித்து சாகவேண்டும் ,என் சாம்பலும் தமிழ் மணக்க வேகவேண்டும் ##ஒன்று பட்டால் உண்டு வாழ்வு .
தமிழ் தமிழனால் மட்டுமல்ல தமிழ்பால் பற்றுள்ளவர் அனைவராலும் கண்டிப்பாக வளரும். அகில உலகிலும் தமிழை பயன்படுத்தும் தமிறல்லாதவர்களின் எண்ணிக்கை எண்ணிலடங்கா. எவன் தடுத்தாலும் தமிழின் வளர்ச்சியை தடுக்க முடியாது. யாரெல்லாம் தமிழை படிக்கவோ, பேசவோ, எழுதவோ விரும்பினால் அவர்களை எந்த தமிழனும் தடுக்காமல் வரவேற்பர். ஆனால் சில தமிழர்களே தமிழை இழிவாக நடத்துவதை கண்டால் மனம் விம்முகிறது. தமிழர்கள் (எந்த சமயத்தை சமயதவர்களானாலும்) எத்தனை பேர் மற்ற தமிழரை சந்தித்தால் தமிழில் வாழ்த்துகிறோம்? நாம் தமிழில் எழுதுவதற்கு செலுத்தும் கவனத்தை போல் பேசும்போதும் கவனமுடன் சரியான உச்சரிப்போடு பேசுவதும் முக்கியம். பெரும்பாலோர் கருத்தை போல் அரசு தமிழை வளர்க்கபோவதில்லை. காரணம் தமிழ் வளர்வதால் அவர்கள் வளரபோவதில்லையே. இந்தோனேசியா, ஆஸ்ட்ரேலியா, ஐயக்கிய அமெரிக்க நாடுகள் (USA) போன்ற நாடுகளில் பள்ளி போதன மொழி ஒரே மொழிதான். அந்நாடுகளில் தமிழின் நிலை தெரியவில்லை. ஆனால் மேண்டரின் (சீன மொழி) புழக்கத்திலும் மற்றும் தனியார் முயற்சியுடன் போதிக்கவும் படுகிறதென்பதை நான் அறிவேன். அண்மையில் நான் இந்தோனேசியாவுக்கு சென்றிருந்தேன், அங்கே ஒரு கத்தோலிக்க குருவானவர் அங்குள்ள தமிழர்களுக்கு தமிழ் போதிக்க முயற்சி எடுத்து பள்ளியும் ஆரம்பித்து நடத்தினாராம். அன்றுவரை எவ்வித முயற்சியும் எடுக்காத அவ்விட தமிழர்கள் வேறொரு பள்ளியை நிறுவி முந்தய பள்ளிக்கு ஆதரவளிக்காமல் அந்த முந்தய பள்ளி தானாகவே மூடப்பட்டுவிட்டது. கால போக்கில் போட்டிக்கு ஆரம்பிக்கப்பட்ட பள்ளியையும் மூடிவிட்டார்கள். கேட்டதும், மனம் வருந்தத்தான் செய்தது. நான் அந்நாட்டு குடிமகனாக இருந்திருந்தால் ஏதாவது செய்திருக்கலாம். அங்கே செய்ய முடியவில்லை, இங்கேயாவது செய்ய முயலுவோம். நமது செயலினை இறைவன் ஆசீர்வதிப்பாராக. சமயம் சமயமாக இருக்கட்டும் மொழி மொழியாக இருக்கட்டும். சமயத்திற்காக மொழியேயன்றி மொழிக்காக சமயம் அல்ல. சமயமின்றி மொழி வளரும் வாழும். மொழியின்றி சமயம் வளராது.
இது தலைமை ஆசிரியரின் தவறு என்றே தோன்றுகிறது. கிருஸ்துவ, முஸ்லிம் மாணவர்களுக்கும் சமய வகுப்புக்கள் நடைபெறுகின்றன. இந்த வகுப்புக்களை ஒரே நேரத்தில் நடைபெறுமாறு பாட அட்டவணையில் திருத்தும் செய்து கொள்ளலாம்.
பத்திரிகை நிருபர் புலி ,மக்கள் ஓசை உரிமையாளர் சுந்தர்
தமிழ் பள்ளிக்கு போகாதவர் ,அவர் யாருடைய மகன் ம்.இ.காவின் முன்னாள் துணைத்தலைவர் டத்தோ ஸ்ரீ சி.சுப்ரமணியத்தின் மகன் , அப்படியிருக்க சுந்தரை தமிழ் பள்ளி க்கு அனுப்புவார் , தமிழ் பள்ளிக்கு நம்மை போல உள்ள சாமானிய மக்கள் தான் தங்கள் பிள்ளைகளை அனுப்புகிறார்கள் , தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிக்கு அனுப்ப மாட்டார்கள் ,காரணம் அவர்களுக்கு தெரியும் அங்கே சரஸ்வதி பூஜையை செய்து பிள்ளைகளை தன் நம்பிக்கையில்லாமல்
தெய்வ நம்பிக்கையை மட்டும் வளர்ப்பார்கள் என்று , இருப்பினும் புலி நைனா சுந்தர் தமிழ் பள்ளிக்கு போகாவிட்டாலும் தமிழ் பத்திரிக்கை அவருக்கும் அவர் , சோறு போடுகிறது ,இங்கே தான் எங்கள் தமிழ் தாய் நிற்கிறார் ,தன்னை மதிகாதவருக்கும் சோறு போடுகிறார் ,
அபப்டி தானே நைனா .
“ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று. ” – குறள் 967
தம்மை மதிக்காதவர் பின்சென்று ஒருவர் எத்தகைய சிறந்த வாழ்க்கையைப் பெறுவதாக இருந்தாலும் , அதைவிட தன் நிலையிலிருந்து தாழாது செத்து மடிவதே மானமுடையவனின் செயலாகும். தேனீ செத்து மடிவார்களா இந்த மானங்கெட்ட வால்பிடிக்கும் சுயநல அரசியல்வாதிகள்?
chakaravarthy அவர்களே ! சமய வகுப்பு வேண்டாம் என்கிறேன்
மீண்டும் மீண்டும் அதே பல்லவிதான் பாடுகிரிர். சமய வகுப்பு
இல்லாமல் தமிழ் மாணவர்களுக்கு மற்ற பாடங்கள் மண்டைக்கு
ஏறாதா? தமிழ் மாணவர்களுக்கு சரஸ்வதி சரி ,இஸ்லாம் ,கிறிஸ்துவ
மாணவர்களுக்கு யார் கல்வி கடவுள் ? அதான் வேணாம் என்கிறேன்.
ஆஹா, அருமையான குறள் ஜெ.வீ. பி. இந்த தரங்கெட்ட அரசியல்வாதிகள் இக்குறளைப் படித்து உள்வாங்கி இருப்பார்களா என்று தெரியவில்லை.
நானும் எனது மூன்று சகோதரர்களும் தமிழ் பள்ளியில் எங்களின் கல்வியை தொடங்கினோம். அந்த காலக்கட்ட தமிழ் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு தமிழ் பேசகூட தெரியாத நிலை. ஆயினும் என் தந்தை தன் பிள்ளைகள் தமிழை கறக்கவேண்டும் என்று எங்களை தமிழ் பள்ளிக்கு அனுப்பினார். நல்ல வேலை ஆரம்ப கல்விக்கு பிறகு நாங்கள் ஆங்கில இடைநிலை பள்ளிக்கு இயல்பாகவே அனுப்பப்பட்டோம், காரணம் தொடர்ந்து படிக்க தமிழ் இடைநிலை பள்ளி இல்லாததே. அந்த சமயத்தில் அனேக முஸ்லிம் நண்பர்களும் கிறித்தவ நண்பர்களும் அதே பள்ளியில் படித்தோம். அப்பொழுதும் ஆண்டுதோறும் சரஸ்வதி பூஜை நடத்துவார்கள். முஸ்லிம் மற்றும் கிறித்தவ நண்பர்கள் பூஜையில் கலந்து கொள்ள கட்டயபடுத்தபடவில்லை. ஆயினும் அதன் பிறகு வழங்கப்படும் உணவினில் பங்கெடுப்போம். அன்று பல நன்னெறி பாடங்கள் நடத்தப்பட்டன ஆனால் எவ்வித சமய போதனையும் இல்லாமல். ஆனால் இப்போது நிலைமை அப்படி இல்லை. இன்று தமிழ் பள்ளிகளை சைவ சமயம் கொண்டுள்ள மாதிரி தெரிகிறது. தேசிய மொழி பள்ளிகளில் இஸ்லாம் ஆதிக்கம் செலுத்துவதுபோல தமிழ் பள்ளிகளில் ஹிந்து சமயத்தவர் ஆட்கொள்ள பார்க்கின்றனர். நானும் பல பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டங்களில் பங்கெடுத்துள்ளேன். கூட்டங்கள் இறைபுகழோடு தொடங்கும். அப்படிதான் தொடங்கவும் வேண்டும். ஆனால் அங்கு பெரும்பாலோர் ஹிந்து சமயத்தவர்களாய் இருப்பதால் ஹிந்து முறையில் வழிபாடு செய்வதில் மற்ற சமயத்தவர் எப்படி கலந்துகொள்ள முடியும்? மலாய்காரர்கள் பள்ளியில் மாடு வெட்டினால் பொறுக்க முடியாத நாமும் அவர்களை போல தவறினை செய்வதெப்படி? சமயத்தை போதிக்க சமய கூடங்களை பயன்படுத்துவோம். கல்விக்கூடங்களை கல்வி கற்பிக்க பயன்படுத்துவோம். நான் பலமுறை கூறுவது போல மொழிக்காக சமயம் இல்லை. சமயங்களுக்கெல்லாம் முந்தியது மொழி. சமயமின்றியே மொழி வளர்ந்தது வாழ்ந்தது. ஆனால் மொழியின்றி எந்த சமயமும், சமய போதனைகளும் எவரையும் சென்றடையாது, வளராது. சமயத்தால் மாற்று நம்பிக்கை கொண்டவர்கள்கூட மொழியால் ஒன்றுப்பட்டு செயல்படலாம், செயல்ப்பட்டும் உள்ளனர். ஆக முழு மனித வளர்ச்சியை முன்னிட்டு எந்தெந்த வகையில் நாம் ஒன்றுப்பட்டு செயல் படலாம் என்று எல்லோருடைய நன்மைக்காக செயல்பட இறைவன் நம்மை ஆசீர்வதித்து வழி நடத்துவாராக.
அந்த கால புலவர்களும் (திருக்குறல்), இந்த கால கவிஞர்களும் (திரைப்படலாசிரியர்கள்) பாடாய் படிப்பது, அறிவுக்கு வேலை கொடு, பகுத்தறிவுக்கு வேலை கொடு என்று. பகுத்தறிவாளர்கள் கூறுவது பகுத்தறிவுடன் செயல்படு, தெய்வம் உன்னுடன் துணை கொள்ளும் என்று. சமய அறிஞர்கள் கூறுவதோ இறைவழியில் செல் பகுத்தறிவு தானாக வளரும் என்று. இவர்கள் இருவரின் இலக்கும் ஒன்றே. தமிழர்கள் எப்பேற்பட்டாவது நழ்வழியில் முன்னுக்கு வந்துவிட வேண்டும் என்று. இவர்கள் இருவரின் இலக்கும் ஒன்றே தவிர செல்லும் பாதைகள்தான் வெவ்வேறு. இவர்கள் இருவரும் ஒன்றினைந்து மக்களுக்கு தொண்டு செய்ய ஆரம்பித்துவிட்டால்!
காசுக்காக தன்னம்பிக்கையை அழித்து மூடநம்பிக்கையை வளர்க்கும் போலி சாமியார்களும், காளான் போல் வளரும் காவி உடை போர்த்திய குருஜிக்களும், பகல் வேச கொள்ளைக்காரர்களும் (அரசியல்வாதிகள்) தானாகவே ஒழிந்து போவர். ஆனால் இவர்கள் இருவரும் ஒன்றினைய மாட்டார்கள். காரணம் தான், நான் என்ற ஆணவ அரக்கன் ஆழ்மனதில் அமர்ந்து ஆட்சி செய்வதால். (நம்மடைய மனதின் செயல்பாட்டையும் நாம் சிறிது அறிந்து வைத்திருக்க வேண்டும்). அந்த ஆணவத்தை அடக்குவதற்கும் நம் முன்னோர்கள் யானையின் உருவ வழி (உருவமோ பெரியது குணமோ சாதுவானது) உளவியல் பாடத்தை நமக்கழித்தனர். ஒன்றும் அரியாத ஆரியனோ, இதுவும் ஒரு தெய்வம். இதற்கே முதல் புஜை போடு என்று நம்மை முட்டாளாக்கி விட்டனர். நாம் செய்யும் எந்த ஒரு செயலுமே நமக்கு வினையாக வந்து சேரும். வினை விதைத்தவன் வினை அறுப்பான். வினை-வினாயகர்= யானை.
கற்பாறையின் மேல் வீனையுடன் அமர்ந்திருக்கும் சரஸ்வதி சிலை. நம் முன்னோர்கள் நமக்கழித்த உளவியல் பாடம். கற்பாறை எப்பேற்பட்ட பேரழிவிலும் அழியாத ஒரு பொருள். நீ படித்த கல்வி உன் உயர்விலும், தாழ்விலும் உன் ஆயுள் உள்ளவரை உன்னுடன் வரும். வீனை -இசை — எல்லோராலும் விரும்பப்படுவது. நீ கற்ற கல்வியால் நன்நடைத்தையுடன் செயல் பட்டால், எல்லோராலும் போற்றப்படுவாய், மதிக்கப்படுவாய். நன்றி என் இளமைக்கால பள்ளி ஆசிரியருக்கு. சரஸ்வதி படத்தை விளக்கமளித்தற்கு. (சரஸ்வதி தெய்வமல்ல உளவியல் பாடம்) ஆரியன் காசுக்காக தெய்வமாக்கி விட்டான். அவன் செய்த சதி, விதியாக தொடர்ந்து வருகின்றது. மதியால் வெல்ல முடியுமா? நம் இளைய தலைமுறையினர்தான் பதில் சொல்ல வேண்டும்.
ஆசாமி அவர்களே! இப்போதைக்கு உங்களுக்குக் கடவுள் வேன்டாவதராக இருக்கலாம். எப்போதைக்கும் அப்படி நீங்கள் இருக்க முடியாது. பெரியார் ஒருவர் மட்டும் தான் பெரியாராக இருக்க முடியும். மற்றவர்கள் எல்லாம் பேச்சோடு சரி!
மலாய்க்கார மாணவர்களுக்கு சமய அறிவை மலாய்ப்பள்ளிகளில் முதலாவது வகுப்பில் இருந்தே போதிக்கப் படும்போது, தமிழ் பள்ளி மாணவர்களுக்கு சமய அறிவை தமிழ் பள்ளியில் போதிக்க வேண்டாம் என்பது அறிவுடமையா? சொல்லுங்கள் ஆசாமி. யாம் ஒரு தமிழ் பள்ளியில் தமிழ் மாணவர்களுக்கு சமய அறிவை போதிக்கும் நேரத்தில், கிறிஸ்துவ மற்றும் முஸ்லிம் மத மாணவர்களுக்கு அவர்தம் மத ஆசிரியர்கள் தனியே வகுப்பறையில் அவரவர் மத வேதங்களை புகற்றி வருகின்றனர். இது நடப்பதும் ஒரு பட்டணத்தில் உள்ள பள்ளியிலே. இதுதான் வேற்றுமையிலும் ஒற்றுமை என்பது. நம் பிள்ளைகள் தான்தோன்றித் தனமாகப் போவதற்கு சமய பண்பாடு இல்லாததும் ஒரு காரணம் என்று அறிந்துக் கொள்ளுங்கள். மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்திய கதையாக வேண்டாம். சரியான வழியில் தூரநோக்குடன் சிந்தியுங்கள். செயல்படுங்கள். எல்லாம் நன்மைக்காகவே என்று.
தொ.ப. தங்கள் தகப்பனாரின் தமிழ் பற்றுக்கும், தங்களின் தமிழ் பற்றுக்கும் தலை வணங்குகின்றேன். மலாய்ப் பள்ளிகளில் மற்றும் இதர அரசாங்க நிகழ்வுகளிலும், முஸ்லிம் அல்லாதவர்கள் கலந்து இருந்தாலும் அந்நேரத்தில் நிகழும் ‘Sembayang Hajat’ மற்றும் இதர இஸ்லாத்தின் சமய சார்புடைய சொற்பொழிவுகளைக் கேட்டுக் கொண்டு வெறுமனே நின்றோ அல்லது அமர்ந்துக் கொண்டோ இருக்கின்றோம் அல்லவா. அதற்க்குக் காரணம் முஸ்லிம் மக்கள் அவ்விடத்தில் பெரும்பான்மையாக இருப்பதினால். அதைப்போலவே விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை நம்மிடமும் இருக்க வேண்டும். இல்லையேல், வேற்றுமையில் எப்படி ஒற்றுமையாக வாழ முடியும்? சைவமும் தமிழும் ஒன்றித்தே வளர்ந்தது, வாழ்ந்தது. இதை தமிழர்களின் வரலாறு பறைசாற்றும். இதை மறுக்கவோ, புறக்கணிக்கவோ முடியாது. அவற்றைப் பிரிப்பது, தமிழர்களின் சமயத்தின் ஆணி வேற்றை அறுப்பதற்குச் சமமாகும். இதைத்தான் தாங்கள் எதிர்பார்கிண்றீர்கள் என்றால், யாம் இன்னும் கடினமாக எழுத வேண்டி வரும்.
தமிழர்கள் சஞ்சிக் கூலிகளாக கையில் ஒரு தகரபெட்டியையும், துணி முன்டாசையும் தலையில் வைத்துக் கொண்டு கப்பலை விட்டு இந்நாட்டில் இறங்கியவர்கள். வந்தவர்கள் எந்த ஒரு சமய அறிவையும் தம்முடன் கொண்டு வரவில்லை. உடல் உழைப்பை மட்டுமே நம்பி பிழைக்க வந்தவர்கள். அதனால் எமது பெற்றோர் சமய அறிவைக் கொண்டிருக்கவில்லை. அவர்கள் அறிந்து வைத்து இருந்தது எல்லாம் மரபு வழி வந்த சிறு தெய்வ வழிப்பாட்டு முறைகளே. அதையே அடுத்தடுத்து வந்த தமிழர் தலைமுறையினரும் இந்நாட்டில் பின் பற்றி வந்தனர். தற்சமயம் இந்நாட்டு தமிழ் இளையோரிடையே ஏற்பட்டிருக்கும் தமிழர் சமய அறிவு, அச்சமயத்தை மீட்டு எடுக்கும் முயற்சி வரவேற்கத் தக்கது. நம்முடைய சமய இறை கோட்பாடு, அச்சமயம் உணர்த்தும் சமூகவியல் அறம், அதன் ஆளுமைத் தன்மை, தொன்மை, அதன் வழி நம் எதிர்கால தலைமுறையினரின் பண்பாடு, நாகரீக வளர்ச்சி அனைத்தும் சிறந்தோங்க பாடுபட வேண்டியது அவர்தம் சமயத்துக்கு ஆற்றும் கடமை. அதற்கு இந்நாட்டுத் தமிழர்களுக்கு ஒரு பாலமாக அமைவதுதான் நமது தமிழ்ப் பள்ளிகள். ஆகையால், தமிழ்ப் பள்ளிகள் ஆற்றும் தொண்டுக்கு தடைக்கல்லாக இருக்க வேண்டாம் என்று அன்பார்ந்த மதம் மாறிகளைக் கேட்டுக் கொள்கின்றேன். மதம் மாறிகள் எங்களுக்கு கற்றுக் கொடுத்த படிப்பினையால்தான் இன்று நாங்கள் விழித்துக் கொண்டோம். வீறு நடை போடுகின்றோம். நல்வழிக்கே என்ற நல் எண்ணத்தில். எப்படி மதம் மாறிகள் தங்கள் நிலையை விட்டுக் கொடுக்க மனமில்லையோ அதே நிலைதான் எங்களுக்கும் என்று அறிய வேண்டும். எப்படி மதம் மாறிகள் தத்தம் மதங்களை பிற தமிழரிடம் விற்க தமிழையே கோடரிக் கம்பாக பயன்படுத்துகின்றனரோ, அதே தமிழை எங்களுடைய ஆயுதமாகக் கொண்டு எம் சமயத்தை தற்காப்பதில் என்ன தவறு இருக்க முடியும்?
உங்கள் வாதம் அருமை…..பின்வரும் வரிகள் என்னை மிகவும் கவர்ந்துவிட்டன.
தமிழ்ப் பள்ளிகள் பற்றிய புள்ளிவிவரங்களைத் தயார்படுத்துகிறோம் என்றும் தேவைகளைப் பற்றி ஆய்வுகள் செய்கிறோம் என்றும் பிரதமர் துறை அதிகாரிகள் கூறுவது இந்தியர்களை ஏமாற்றும் கலப்படமில்லாத கயமைத்தனம். மலேசியத் தமிழ்ப் பள்ளிகள் மலேசியாவில்தான் இருக்கின்றன. மாநில கல்வித்துறையில் எல்லாப் புள்ளிவிவரங்களும் இருக்க வேண்டும். அவற்றின் தொகுப்பு கல்வி அமைச்சில் இருக்க வேண்டும். இணையத்தில் இவற்றைப் பெற அரை மணி நேரம் போதும். அப்புறம் என்ன ஆராய்ச்சி?
மலாய்க்காரர்கள் மலாய்ப் பள்ளிகளை மேம்படுத்த அரசாங்கத்தை மட்டும் எதிர்பார்க்கக் கூடாது என்று சொல்லாத பிரதமர் இந்தியர்களைப் பார்த்து ஏன் அப்படிச் சொல்ல வேண்டும் என்று இந்த மகா மேதாவி ஆராய்ச்சியாளர்கள் பிரதமரைக் கேட்பார்களா?
கல்வி அமைச்சில் பணி செய்யும் எல்லா இந்திய அதிகாரிகளும் தமிழர்கள் அல்லவே! எனவே, அவர்கள் தமிழ்ப்பள்ளி நீடிக்க வேண்டுமென விரும்புவார்களா? கொசுறு தகவல் : தமிழரல்லாத தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் ஒருவர் ஒரு பெற்றோரிடம் தன் பிள்ளையை தேசிய பள்ளிக்கு அனுப்பச் சொன்னான். இவனே இப்படி என்றால்…..சீனர்களின் கதை வேறு, அவர்கள் எத்தனை பிரிவினராக இருந்தாலும் அவர்களுக்கு மெண்டரின் ஒரு மொழிதான். இந்தியர்களின் நிலை அப்படியா? தமிழ், தெலுங்கு, மளையாலம், பஞ்சாபி இப்படிப் பல. எனவே, தமிழ்ப்பள்ளிகளுக்கு எந்த காலத்திலும் 100% இந்தியர்கள் வரப்போவதில்லை. தமிழைத் தவிர்த்து பிற மொழி பேசும் ஒரு சில இந்தியர்கள் தங்கள் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்பிவைப்பது போற்றத்தக்கது.
தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் பலர் அர்ப்பணிப்பு உணர்வோடுதான் பணி செய்கிறார்கள். மறுப்பதற்கில்லை. ஆனால், அனைவருமே சீனர்களைப் போன்று உழைக்க வேண்டும். நம் தமிழ்ப்பள்ளிக்கு வரும் ஒவ்வொரு மாணவனையும் எழுதப் படிக்கச் செய்ய வேண்டும். செய்வார்களா?
கோயிலோடு நிறுத்த வேண்டிய சமயத்தை,ஏன் பள்ளியில் புகுத்த வேண்டும் ? திருக்குறளை போதியுங்கள்,அதில் எல்லா நன்னெறியும்
உள்ளது,எல்லா இன மாணவர்களுக்கும் பொருந்தும் ,சும்மா
சரஸ்வதியை காட்டி பயம் காட்ட வேண்டாம். சரஸ்வதியை நம்பியா
சீன பிள்ளைகள் படிக்கிறார்கள்?
தேனி அவர்களே வணக்கம். கோபம் வேண்டாம். என் மனம் தங்கள் வார்த்தையின் வரிகளால் கணக்கிறது. ஒருகால் என் வரிகள் தங்களை புண்படுத்தியிருக்கலாம். மன்னிப்பு கோருகிரேன். என் சாரத்தின் கருத்து, சமய அறிவுடன் பகுத்தறிவும் கலந்து கொடுக்க வேண்டும் என்பதே. —— 15 வருடங்களுக்கு முன்பு ( கூலி வேலை) 1000 வெள்ளி சம்பளத்தில் வேலை செய்த நான், மதம் மாறிய முதலாளி மதம் மாற சொன்னதால், வேலையே வேண்டாம் என்று வந்தவன் நான். 5000-ம் வெள்ளி வரை நஷ்டம் எனக்கு. வேண்டாம் ஜய்யா மனம் கணக்கிறது கோடாரி காம்பு, மதம் மாறி என்று. 2-3 நாட்களில் பதில் எழுதுகிரேன். இன்றைய எனது தொழில் அப்படி.
ஆசாமி உங்கள் கருத்தை மதிக்கிறேன். பெரும்பாலான மக்களின் தீர்ப்பை நாம் ஏற்றுக் கொள்ள பழகிக்கொள்ள வேண்டும். வேறு வழியில்லை. ஆனாலும் பிற இனத்தவரிடையே நம்மை நாமே காட்டிக் கொடுக்க வேண்டாம். அது நமது உரிமை என தற்காப்போம்
உழவரே எமது கருத்து தோவன்னா பாவன்னாவின் கருத்துக்கு பதிலாக வந்தது. தங்களுடைய கருத்துக்கு அல்ல. தங்களுடைய கருத்தையும் படித்தேன். அதில் தாங்கள் அறியாத சித்தாந்த செய்தி ஒன்று அடங்கியுள்ளது. ஒய்வு இருக்கும் பொழுது பதில் எழுதுகின்றேன்.