ஒஸ்கர் நாயகன், இசைப்புயல் என்றெல்லாம் புகழப்படும் ஏ.ஆர்.ரஹ்மான் பிடிக்காத வார்த்தை ஒன்று உள்ளதாம்.
இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தமிழ், தெலுங்கு, இந்தி என இந்திய படங்களுக்கு மட்டுமல்லாமல் ஹாலிவுட் படங்களுக்கும் இசை அமைத்திருக்கிறார்.
ஸ்லம் டாக் மில்லினர் என்ற படத்துக்காக 2 ஒஸ்கர் விருதுகளை வென்றார்.
அவரது புகழை குறிக்கும் வகையில் உலகப் புகழ் பெற்ற இசை சாதனையாளர்கள் மொசார்த், பீதோவன் ஆகியோர்களின் பெயரை ரகுமான் பெயருடன் இணைத்து ‘மொசார்த் ஆப் மெட்ராஸ், ‘பீதோவன் ஆப் பாலிவுட் என வர்ணிக்கிறார்கள்.
ஆனால் அந்த பட்டங்கள் பிடிக்கவில்லை என்று ரகுமான் கூறி இருக்கிறார்.
இதுபற்றி அவர் தனது இணையதள பக்கத்தில் கூறி இருப்பதாவது, மொசார்த், பீதோவன் போன்றவர்கள் உலகப் புகழ் பெற்றவர்கள் அவர்களுடன் என்னை ஒப்பிடாதீர்கள், அது எனக்கு வருத்தம் தருகிறது.
இசைப்புயல் என்ற அடைமொழியே எனக்கு போதும், அப்படி அழைப்பதையே சந்தோஷமாக எண்ணுகிறேன்.
எனது பழைய பெயர் திலீப்குமார், அந்த பெயரில் வாழ்ந்தபோது வாழ்க்கையில் கசப்பான அனுபவங்கள் பெற்றேன், இதையடுத்துதான் ஏ.ஆர்.ரகுமான் ஆனேன்.
பழைய கசப்பான அனுபவங்களை மீண்டும் நினைவுக்கு கொண்டு வர விரும்பவில்லை.
அதனால் திலீப்குமார் என்றும் என்னை குறிப்பிடுவதும் பிடிக்கவில்லை என அவரது இணையத்தளப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் மலேசியாவில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழ் பத்திரிகை நிருபர்களை நீஙகள் உதாசீனம் செய்து விட்டீர்களாமே. உண்மையா?
நீங்கள் நினைத்தது நிறைவேறும்! எல்லாப் புகழும் இறைவனுக்கே!
உண்மையான பேச்சு, உங்களிடைய தைரியத்துக்கு பாராட்டுக்கள். உங்களுக்கு உலக முழுவதும் ரசிகர்கள் உண்டு ARR.உங்களுடையே பேட்டியை அஸ்ட்ரோ AWANI யில் பார்த்தேன் சந்தோசம்.
ஆமாம் ஐயா எல்லாப் புகழும் இறைவனுக்குத்தான்! அந்த இறைவன் மாபெரும் புகழ்விரும்பி!
குமார் உங்கள் கருத்து சரியான நெத்திய
எவ்வளவு பெரிய முட்டாள்தனமான வாதம். பெயருக்கும் வாழ்க்கைக்கும் என்ன சம்பந்தம்? நமக்கு அறிவு இல்லை என்றால் எடுக்கும் முடிவுகளும் அபத்தமாகத்தான் இருக்கும்; வாழ்க்கையும் அப்படித்தான் இருக்கும். இந்தப் பேச்சு இளைஞர்களுக்கான எதிர்மறையானப் பேச்சு என்பேன்.