நடிகர்கள் தாங்கள் உயரம் குறைவாக இருக்கிறோமே என்று கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என்கிறார் இயக்குனரும், எழுத்தாளருமான வி.சி.குகநாதன். சமீபத்தில் ஒரு படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொண்ட அவர், அப்படத்தின் நாயகன் நார்மலான உயரத்தில் இருப்பதைப்பார்த்து அனைவரும் கதாநாயகன் ரொம்ப சிறுவனாக இருப்பதாக பேசினார்கள். அதைப்பார்த்த வி.சி.குகநாதனோ, சினிமா சிறிய மடுவையும் பெரிய மலையாக காட்டக்கூடிய பிரமாண்டமான சாதனம். அதனால் இங்கு உருவத்தை விட திறமைகள் மட்டுமே முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டு வருகிறது.
உதாரணத்துக்கு சொல்ல வேண்டுமென்றால், எம்.ஜி.ஆ, சிவாஜி இருவருமே திரையில் பிரமாண்டமாக தெரிவார்கள். அதிலும் சில வரலாற்றுக்கதைகளில் அந்த காலத்து அரசர்களை கண்முன்னே கொண்டு நிறுத்தினார்களாம். அந்த அளவுக்கு பிரமாதமாக நடித்தார்கள். ஆனால், அவர்களது உயரத்தைப்பார்த்தால் 5.7 தான். திறமையானவர்களுக்கு உயரம் என்பது ஒரு தடையே இல்லை என்பதை அவர்கள் நிரூபித்துக்காட்டினார்கள்.
அதனால் நமது முன்னோடிகளைக் கருத்தில் கொண்டு புதிதாக சினிமாத்துறைக்குள் வரும் நடிகர்கள், உயரம், உருவம் என்பதை கருத்தில் கொள்ளாமல் திறமையை மட்டுமே மூலதனமாகக்கொண்டு களத்தில் இறங்கினால் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள் என்றார்.