ரஜினி ஆதரவு யாருக்கு ? : சென்னையில் ஆலோசனை

rajiniரஜினி ரசிகர்கள் சென்னையில் அவசர ஆலோசனை  கூட்டம் நடத்தியுள்ளார்கள்.  இக்கூட்டத்தில்,  பாராளு மன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

ரஜினி ஏற்கனவே பல தேர்தல்களில் அரசியல் கட்சிகளூக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.  1996ல் திமுக – தமிழ்மாநில காங்கிரஸ் கூட்டணியை  ஆதரித்தார்.  அதன் பிறகு வந்த தேர்தலில் பாஜகவுக்கு ஓட்டு போட்டார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் நல்லாட்சி அமைக்கும் கட்சிக்கு வாக்களிக்கும் படி கேட்டுக்கொண்டார்.   வருகிற பாராளுமன்ற தேர்தலில் ரஜினி எந்த கட்சியை ஆதரிப்பார் என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.  நரேந்திர மோடிக்கும் நெருக்கமான நட்பு உள்ளது.  எனவே, பாஜகவுக்கு ஆதரவு ஆதரவு தெரிவிக்கலாம் என்ற பேச்சு நிலவுகிறது.

இந்நிலையில்தான் ரசிகர்கள் சென்னையில் கூடியுள்ளார்கள்.  இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து ரஜினி ரசிகர் மன்ற பொறுப்பாளர்கள், ரஜினி ரசிகர் மன்ற பட்டதாரிகள் பேரவை, இளைஞர் பேரவையினர் பங்கேற்றுள்ளனர்.

கூட்டத்தில், தேர்தலில் யாரை ஆதரிப்பது என்று ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக கருத்து சேகரிக் கப்பட்டு பதிவு செய்யப்பட்டது.

சென்னையை அடுத்து சேலத்தில் கூட்டம் நடத்தி ஒவ்வொருவரிடமும் கருத்து கேட்கப்படுகிறது.  அதன் அடிப்படையில் தீர்மானம் நிறவேற்றி ரஜினியிடம் ஒப்படைக்கிறார்கள்.  அவர் இறுதி முடிவு எடுக்க விருக்கிறார்.