கோச்சடையான் இசையில் ரஜினி- அமிதாப்பச்சன்

kochadayan 1கோச்சடையான் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்தும், அமிதாப்பச்சனும் கலந்துகொள்ளவுள்ளனர்.

ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பிரமாண்ட தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கோச்சடையான்.

ரஜினிகாந்துடன், சரத்குமார், நாசர், ஆதி, இந்தி நடிகர் ஜாக்கி ஷராப், தீபிகா படுகோன், ஷோபனா, ருக்மணி மற்றும் பலரும் நடித்து இருக்கிறார்கள்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை சத்யம் திரையரங்கில் வருகிற 9ம் திகதி காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்த விழாவில் ரஜினிகாந்துடன், பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சன் கலந்துகொள்ளவிருக்கிறார்.

விழாவில் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் ஆகிய இருவரும் கலந்துகொள்வதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.