வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயனின் மார்க்கெட் எங்கேயோ போய் விட்டது.
தற்போது சிவகார்த்திகேயன் நடித்துக்கொண்டிருக்கும் படம் மான் கராத்தே. இப்படம் மூலம் சிவகார்த்திகேயன்-ஹன்சிகா முதன்முறையாக ஜோடி சேர்ந்திருக்கிறார்கள். இந்தப் படத்தை ஏ.ஆர்,முருகதாஸிடம் உதவி இயக்குனராக இருந்த திருக்குமரன் என்பவர் இயக்கி வருகிறார். படத்துக்கு ஏ.ஆர். முருகதாஸ் கதை, திரைக்கதை எழுதி இருக்கிறார். அனிருத் இசையமைத்துள்ளார். சிவகார்த்திகேயனோடு ஹன்சிகா நடிப்பதால் இந்த படத்திற்கு கூடுதல் எதிர்ப்பார்ப்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் ‘மான் கராத்தே’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இசையை இயக்குனர் ஷங்கர் வெளியிட, இசையமைப்பாளர் தேவா பெற்றுக்கொண்டார். விழாவில தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் கேயார், செயலாளர் டி.சிவா, பாடலாசிரியர் அறிவுமதி சிவகார்த்திகேயனை புகழ்ந்து தள்ளிவிட்டார்கள்.
கேயார் பேசும்போது, “ இன்றைக்கு ஒரு நடிகரின் கால்ஷீட்டிற்காக தயாரிப்பாளர்கள் எத்தனை கோடி வேண்டுமானாலும் கொடுக்க தயாராக இருக்கிறார்கள் என்றால் அது சிவகார்த்திகேயனுக்கு மட்டும்தான். அந்தளவுக்கு இவருடைய படங்கள் தொடர்ச்சியாக வெற்றிபெற்று கோடிகளை சம்பாதித்து கொடுக்கிறது. இதை வைத்து பார்த்தால் அடுத்த சூப்பர் ஸ்டார் இவர்தானோ என்று சொல்லத் தோணுகிறது. முன்பெல்லாம் எம்.ஜி.ஆர். படங்களுக்குத்தான் இப்படியொரு பேச்சு விநியோகஸ்தர்கள், தியேட்டர்கார்கள் மத்தியில் இருக்கும். ஆனால் இன்றைக்கு சிவகார்த்திகேயன் படமா.. என்ன ஏதுன்னு கேக்காமலேயே படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் தயாராக இருக்காங்க. அந்த அளவுக்கு இவரோட வளர்ச்சி இருக்கு..” என்றார்.
தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் டி.சிவா பேசும்போது, சின்னக் குழந்தை முதல் பெரியவங்கவரைக்கும் அவருக்குக் கிடைச்சிருக்குற ஆடியன்ஸ்.. இதையெல்லாம் வைச்சு சொல்றேன்.. இன்றைய இளையதலைமுறையின் சூப்பர்ஸ்டார் சிவகார்த்திகேயன்தான்..” என்றார்.
பின்னர் பேசிய சிவகார்த்திகேயன், மான் கராத்தே படம் இவ்வளவு நன்றாக வரக் காரணம் தயாரிப்பாளர்கள் ஏ.ஆர். முருகதாஸ், மதன் அவர்கள்தான். எனக்கு அருமையான டீம் அமையறது ரொம்ப லக்குதான். இங்க ஜெயிக்கிறதுக்கு ஒரே வழி கடின உழைப்புதான். ஆனால், நல்ல டீம் அமைஞ்சா ஈஸியா ஜெயிச்சிடலாம். நிறைய பேர் அதை லக்குனு சொல்றாங்க. அப்படின்னா நான் பயங்கர லக்கிதான். இந்த படத்துக்கு ஹன்சிகா , ஹீரோயின்னு சொன்ன உடனே, பாருப்பா இவனுக்கு பயங்கர மச்சத்தைன்னு சொன்னாங்க. அவங்க கூட நடிக்கதானங்க செஞ்சேன்? அது ஒரு பெரிய தப்பா?.
பாடல்கள்தான் படத்துக்கு அடையாளம். தியேட்டருக்கு ரசிகர்களை வரவைக்கிறதே பாடல்கள்தான். அனிருத், இந்த படத்துல கொடுத்திருக்கிற பாடல்களுக்கு டான்ஸ் ஆடறதுக்குள்ளயே நாக்கு தள்ளிடுச்சி. என்னால முடியவேயில்லை. டான்ஸ் ஆடினால் மட்டும்தான் அந்த பாடல்களுக்கு மேட்ச் பண்ண முடியும். சாதாரணமாக இந்தப் பாடல்களுக்கு நடந்தே போயிட முடியாது. படத்தை தைரியமாக நம்பி வந்து பார்க்கலாம். என இவ்வாறு கூறினார். ‘மான் கராத்தே’ படம் வருகிற ஏப்ரல் மாதம் 4-ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.
உன் திறமை உன்னிடம் இல்லை ஆண்டவன் கிடே என்று சொல்லியே ரஜினி தமிழனை எம்றினான் இருபினும் ஒரு தமிழன் தமிழ்நாடுகு
சூப்பர் ஸ்டார் ரக வர என் வாழ்துகள். முதலில் இந்த கன்னட கரனை விரடுவோம். இல்லை
என்றல் அவன் படத்தில் முதலில்
சப்பாது தன் காலில் இருப்பதை நம் முன் கண்பித்து முட்டால் ஆக்குவன். தமிழன்
அவனுக்கு போஸ்டரில் பால் அபிஷேகம் பனுவன். தமிழன் அதுவும் ஏழைகள் அதை வாங்கி குடிக்க சென்றால் அடித்தே அதை படம்
எடுத்து டிவி கரன் காண்பிபாண்.
திறமைக்கு வாழ்த்துக்கள். நமது இரசிகர்கள் முன்னேறிவிட்டார்கள். வாழ்க; வெல்க!
அப்புடி போடு மோகன்
ரஜினி அவருக்கு ஒரு இடத்தை அமைக்க பல ஆண்டுகள் உழைத்தார், தம்பி சிவகார்திகேயன் இபோதுதான் சினிமாவில் அடி வைத்திருக்கிறார் பொறுங்கள் காலம் பதில் சொல்லும்,,,,,,,,,,,,,,,