வடிவேலு படத்துக்கு எதிராக முற்றுகை போராட்டம் வெடிக்கிறது!

vadiவடிவேலு இரண்டு வேடங்களில் நடித்துள்ள படம் ஜெகஜால புஜபல தெனாலிராமன்.

ஏற்கனவே சிம்புதேவன் இயக்கத்தில் நடித்த இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தைப்போன்று இந்த சரித்திர படத்திலும் கிருஷ்ண தேவராயர், தெனாலிராமன் என இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார் வடிவேலு.

தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ள இப்படம், கோடை விடுமுறையில் ரசிகர்களை சந்திக்க வருவதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இப்படத்தில் கிருஷ்ணதேவராயரை இழிவுபடுத்துவது போல் வடிவேலு நடித்திருப்பதாக சொல்லி, தமிழ்நாடு தெலுங்கு மக்கள் பேரவை கொடி பிடித்துள்ளது.

இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெகஜால புஜபல தெனாலிராமன் படத்தில் கிருஷ்ணதேவராயரை இழிவுபடுத்தும் வகையில் சில காட்சிகளில் வடிவேலு நடித்திருப்பதாக தெரிய வருகிறது.

கிருஷ்ணதேவராயரை அவர் இழிவுபடுத்துவது உலகெங்கிலும் உள்ள தெலுங்கு மக்களை இழிவுபடுத்துவதற்கு சமமானது. அதனால் இப்படத்தை வெளியிடக்கூடாது என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதை மீறி படத்தை வெளியிட முயன்றால், வடிவேலு வீட்டின் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்துவோம் என்றும் எச்சரித்துள்ளனர்.