கடந்த சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த வடிவேலு, ‘ஜெகஜால புஜபல தெனாலிராமன்’ படத்தின் மூலம் மீண்டும் நடிக்க திரும்பியிருக்கிறார்.
இப்படத்தில் மன்னர், தெனாலிராமன் என்ற கேரக்டர்களில் நடிக்கிறார். இரண்டு கேரக்டருக்கும் வித்தியாசம் வேண்டும் என்பதற்காக, தனது பாடிலேங்குவேஜை முழுவதுமாக மாற்றி நடித்திருக்கிறாராம். ஜோடியாக மீனாட்சி தீக்ஷித் நடிக்கிறார். இவர்களுடன் மனோபாலா, மன்சூர் அலிகான், சந்தான பாரதி, ஜோ மல்லூரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. அரங்குகளில் மட்டுமன்றி குற்றாலம், அச்சன்கோவில், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெற்றது. ஏற்கெனவே படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இபோது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் கிட்டதட்ட முடியும் தருவாயில் உள்ளதாம்.
எனவே, அடுத்தவாரம் படத்தை தணிக்கை சான்றிதழுக்காக அனுப்ப இருக்கிறார்கள். தொடர்ந்து ஏப்ரல் 1ஆம் தேதி படத்தின் இசைவெளியீட்டு விழாவையும் அடுத்த பத்து நாட்களிலேயே அதாவது ஏப்ரல் 11ஆம் தேதியே படத்தையும் ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.
இப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் யுவராஜ். ஏ.ஜி.எஸ் நிறுவனம் இப்படத்தினை தயாரித்து இருக்கிறது. நீண்ட இடைவெளியைத் தொடர்ந்து வடிவேலுவின் படம் வெளியாவதால் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
நல்ல நகைச்சுவை இல்லாமல் எல்லாம் வறண்டு போய்விட்டது. வாருங்கள் வடிவேலு! மீண்டும் கொடி நாட்டுக!
வாருங்கள் வடிவேல் ,நிங்கள் இல்லாமல் நகைசுவை என்ற பேரில் ஒருத்தன் நாசம் பண்ணி ,பணிக்கொண்டு இருக்கிறான் உங்கள் வருகை எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி,தயவு செய்து அரசியலில் முக்கை நுளைகாதிர்கள்
இவரின் அபார திறமையான நகைசுவை இன்றி வெறிச்சோடி விட்டது அனால் இனி மேல் ஆவது அடி வாங்குவது, அசிங்க படுவது போன்று நடித்து ரசிகர்களை சிரிக்க வைக்காமல் திறமையை கொண்டு சிரிக்க வைத்தால் சிறப்பு (காரணம் ஒரு மனிதன் அவமான படுவதை கண்டு சிரிப்பது அனாகாரிகம்)