தமிழ் சினிமாவைப்பொறுத்தவரை பழம்பெரும் காமெடியன்கள் யாருமே காமெடி வசனங்களில் ஆபாசம் கலந்து பேசியதில்லை. வெண்ணிற ஆடை மூர்த்தி மட்டும்தான் அவ்வப்போது அருவருக்கத்தக்க வகையில் ஆபாசமாக பேசி முகம் சுழிக்க வைத்து வருகிறார்.
அவரைத் தொடர்ந்து சந்தானமும் அந்த வளையத்திற்குள் சிக்கிக்கொண்டார். டயமிங் காமெடி என்ற பெயரில் நான் புதிதாக காமெடி செய்கிறேன் எனறு சொல்லி வந்த அவர், சில படங்களில் அளவுக்கதிகமான ஆபாசத்தை திணித்து பேசியதால், வெண்ணிற ஆடை மூர்த்தியின் அடுத்த வாரிசு என்று பெயரெடுத்தார். அதுவே அவரது மார்க்கெட்டிற்கும் உலை வைத்து விட்டது.
அதனால் அந்த சரிவை பயன்படுத்தி அவருக்கு அடுத்தபடியாக வந்து கொண்டிருந்த புரோட்டா சூரி இப்போது சந்தானம் நடிக்க வேண்டிய பல படங்களை கைப்பற்றி முன்னணி காமெடியனாகிக் கொண்டிருக்கிறார். அதோடு, சந்தானம் செய்த தவறை எக்காரணம் கொண்டும் தான் செய்து விடக்கூடாது என்று உஷாராகி விட்டார் சூரி.
அதாவது, டைரக்டர்கள் தனக்கு கொடுக்கும் வசனங்களை ரிகர்சல் பார்க்கும்போதே அதில் ஏதேனும் ஆபாச நெடி தென்படுகிறதா என்று உன்னிப்பாக கவனிக்கிறார்.
அப்படி லேசான டபுள் மீனிங் வசனங்களை டைரக்டர்கள் சொருகியிருநதால், உடனே அவர்களை அணுகி இந்த டயலாக் வேண்டாம். இதற்கு பதிலாக வேறு டயலாக் போட்டுக்கொள்கிறேன் என்று தனது சார்பில் சில வசனங்களை எடுத்து விட்டு ஓகே செய்து விடுகிறார்.
இதன்காரணமாக, தனக்கு ஸ்பாட் காமெடி டயலாக்குகளை எடுத்துக் கொடுப்பதற்கு சில காமெடி ரைட்டர்களையும் ரெடி பண்ணி வைத்திருக்கிறார் சூரி.
சரியான முடிவு . வெற்றி நிச்சயம் . உங்கள் காமெடி நன்றாக உள்ளது .வாழ்த்துகள் . அன்புடன் மலேசியா ரசிகர் எம் எல் சரவணன் .