இங்கிலாந்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர் பால்சகூ நிறுவிய ஆசியன் அவார்ட்ஸ் என்ற அமைப்பு ஆண்டுதோறும் ஆசியாவில் செல்வாக்குமிக்க 100 பேர் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான செல்வாக்குமிக்கவர்கள் பட்டியலை நேற்று (ஏப்ரல் 6) வெளியிட்டது. இந்த பட்டியலில் இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுக்கு 63வது இடமும், தென்னிந்திய சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு 66வது இடமும் வழங்கி உள்ளது.
சீன அதிபர் சீ ஜின்பிங் முதல் இடத்தையும், காங்கிரஸ் தலைவர் சோனியா 2வது இடத்தையும் பிடித்துள்ளனர். பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு 4வது இடமும், காங்கிரஸ் துணை தலைவர் ராகுலுக்கு 5வது இடமும், பிரதமர் மன்மோகன் சிங் 6வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
மற்றவர்களுக்கும், ரஜினிக்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறது. மற்றவர்கள் தங்கள் கட்சி, அதிகார பலம், ஆள்பலம், பணபலத்தால் அந்த இடத்தை பிடித்தவர்கள் ரஜினி ஒன்மேன் ஆர்மி மாதிரி தன் திறமை, தன் ஆளுமை மூலம் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


























இந்தியாவிலேயே அருமையான் ஆங்கிலம் பேசும் (அப்படித்தான் சொல்லுகிறார்கள்) செல்வி ஜெயலலிதா எத்தனையாவது இடத்தில் இருக்கிறார்? அல்லது இடமே இல்லையா!
பலே!!! சூபெர்ஸ்டார்………. ஒருதடவ சொன்னா நூறுதடவ சொன்னமாதிரி!!!! ஆள்காட்டி ஒத்த விரல சுத்திகாட்டுப்பா>>>>