மான் கராத்தே படத்தின் வெற்றியை பத்திரிக்கை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள நேற்று சென்னை உள்ள நட்சத்திர ஹோட்டலில் மான் கராத்தே & பட குழு வந்திருந்தனர். இவ்விழாவில் சிவகார்த்திகேயன், ஹன்சிகா, சதீஷ், இயக்குநர் திருக்குமரன், ஏ.ஆர்.முருகதாஸ், தயாரிப்பாளர் மதன் மற்றும் அனிருத் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய அனைவரும் படம் வெற்றி அடைந்ததற்கு நன்றி கூறினார். பின்னர் ஏ.ஆர்.முருகதாஸ் பேச தொடங்கினார். அப்போது பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நான் தயாரிப்பாளர் ஆகவில்லை, நல்ல திறமையான, வாய்ப்புக்காக ஏங்குவோர்களை ஊக்குவிக்கவே நான் தயாரிப்பாளர் ஆனேன் என்றார்.
இதைதவிர அவர் சிவகார்த்திகேயனையும் கொஞ்சம் எச்சரிக்கையும் செய்தார். ஒரு படம் ஹிட் ஆகிட்டாலே அந்த ஹிரோவை கையில் புடிக்க முடியாது, சிவாவுக்கு மூணு படம் தொடர்ந்து ஹிட் ஆகியிருக்கு இதனால் இனி வரும் படங்களில் மக்கள் உங்களிடம் என்ன எதிர்ப்பார்க்கிறார்களோ அதை நீங்கள் செய்தால் போதும், நீங்கள் இன்னும் செல்ல வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது இப்ப தான் நீங்க பாதி கிணறு தாண்டியிருக்கீங்க அதுக்குள்ள நீங்க கருத்து சொல்ற படம், ஆக்ஷன் படம்னு போகாம, குழந்தைகள், குடும்பங்கள் என்ன எதிர்ப்பார்க்கிறார்களோ அதை செய்தான் போதும் என்று கூறினார்.
இதனையடுத்து பேச வந்த சிவகார்த்திகேயனும் முருகதாஸ் சார் சொன்னது எனக்கு உதவும்னு நம்புறேன், அவர் எதை மனசில் வச்சிட்டு சொன்னாருன்னு எனக்கு தெரியும். கண்டிப்பா எல்லோரும் விரும்பும் படமாகவே நடிப்பேன் என்று கூறி மான் கராத்தே வெற்றிக்கு நன்றி தெரிவித்தார்.
இந்த படம் வெற்றின்னு எவண்டா சொன்னது ???
டேய் இந்த படம் திரைக்கு வந்து 4 நாட்கள் தாண்டா ஆகுது, அதுக்குள்ளே எப்படிடா? என்னமோ போங்கடா.
ஏ.ஆர். முருகதாஸ் தான் சொன்னார்! அவர் ஆசையை நீங்கள் ஏன் கெடுக்கிறீர்கள்!
மான் கராத்தே ! 25% தண்ணி போடும் காட்சிகள் என்னை கடுப்பில் ஆழ்த்தியது ! எவண்டா சொன்னா வெற்றி படம்முனு ?
கொஞ்சம் பொருங்க பாஸ்.