தமிழ் புத்தாண்டு நாளில் சிறப்பு விருந்தினர்களின் நிகழ்ச்சிகளுக்காக பறந்துக்கொண்டிருக்கிறது பல சேனல்கள்.
இதற்கிடையில் ஜெயா டிவி சில சுவாரசியங்களை செய்யவுள்ளது. பல ஆண்டு காலம் பேட்டியே கொடுக்காத ரஜினி, தமிழ் புத்தாண்டிற்காக பேட்டி கொடுத்திருப்பது அதுவும் அவரை பேட்டி எடுப்பது விவேக் என்பது நமக்கு தெரிந்த ஒரு விஷயம் என்றாலும்,மறுபக்கம்!!!!! வேற என்ன வடிவேலுவின் பேட்டி தான், என்ன ரஜினியை விட வடிவேலுவிற்கு இவ்வளவு முக்கியத்துவம் என்கிறீர்களா??????
திமுகவிற்கு அதரவாக இருந்த வடிவேலுவின் மீது கோபம் இருந்தாலும் அவரது பேட்டியை தமிழ் புத்தாண்டிற்கு வெளியிடுவது பெரும் ஆச்சர்யத்தை கிளப்பியுள்ளது.
ஜெயலலிதா கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில் இளையராஜா, ரஜினி, கமல் போன்ற பல ஜாம்பவான்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இதில் வடிவேலுவிற்கும் அழைப்பு விடுத்துள்ள நிலையில் அவர் தவிர்க்க முடியாத காரணத்தினால் அதில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தெனாலிராமன் வெளிவர உள்ள நிலையில் ஆளும் கட்சியன் தாக்கம் இருக்குமோ என வடிவேலு அஞ்சியுள்ளார்.
ஆனால் தற்பொழுது வடிவேலு நிகழ்ச்சி ஜெயா டிவியில் ஒளிபரப்பாக இருப்பது வடிவேலுவிற்கு பேரச்சத்தை நீக்கியிருக்கிறது.
எப்படியோ வர இருக்கும் தமிழ் புத்தாண்டு தெனாலிராமனுக்கு தகுந்த புத்தாண்டு தான்!!!!
இனிமேலாவது திருந்தும் ஐய்யா. உமக்கு ஏன் இந்த அரசியல் .
அவர் கலந்து கொண்டு தான் ஆக வேண்டும். அம்மா அப்படித் தப்பித் தவறி பிரதமர் ஆகிவிட்டால் வடிவேலுவை மதுரையை விட்டே நாடு கடத்தி விடுவார்!
அரசனை ( கருணாநிதி ) நம்பி , புருஷனை ( சினிமா ) பறிகொடுத்த கதைதான் வடிவேலுவின் கதை !