தோனியைத் தொடர்ந்து நடிகர் பிரகாஷ்ராஜ் தயாரித்து, இயக்கி நடித்துள்ள படம் ‘உன் சமையல் அறையில்’. மலையாளத்தில் வெளியான சால்ட் அண்ட் பெப்பர் என்ற படத்தில் ரீமேக்கான இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் தயாராகியுள்ளது. காதல், பசி என்ற இரண்டு விதமான தீமை எடுத்து கதை பண்ணப்பட்டுள்ளது.
இப்படத்தின் ஆடியோ விழா நேற்று மதியம் 2 மணி அளவில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. விழாவில், இளையராஜா, பிரகாஷ்ராஜ், சினேகா, சிவா, பழனிபாரதி, போனிவர்மா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் இளையராஜா பேசுகையில், நான் எந்த படமாக இருந்தாலும், அன்றைக்கு கம்போஸ் செய்வதைப்பற்றி மட்டுமே யோசிப்பேன். மற்ற விசயங்களை மனதில் போட்டு குழப்பிக்கொள்வதே இல்லை.
ஆனால், இந்த படத்தில் மனித பொறப்பு ரசிச்சு ருசிச்சு சாப்பிட பிறந்தது என்ற கருத்து அடிப்படையில் உருவான பாடல் கம்போஸ் செய்த பிறகும் அவ்வப்போது என் மனதில் ஓடிக்கொண்டேயிருந்தது.
அப்படியிருந்தபோதுதான், ஒருநாள் நான் பாத்ரூமில் குளித்துக்கொண்டிருந்தபோது, அந்த பாடலின் பல்லவி தவறாக இடம்பெற்று விட்டதாக உணர்ந்தேன்.
அதே பாடலில் இடம்பெற்ற இன்னொரு வரிதான் பல்லவியின் முதல் வரியாக வரவேண்டும் என்று தோன்றியது. அதாவது இந்த பொறப்புதான் நல்லா ரசிச்சு சாப்பிட கிடைத்தது என்பதை முதல் வரியாக வைத்தால் நன்றாக இருக்கும் என்று மனதிற்கு பட்டது.
அதன்பிறகு இதுபற்றி பிரகாஷ்ராஜிடம் சொன்னபோது, அப்படியே வைத்துக்கொள்ளலாம் என்று சொன்னதையடுத்து, பின்னர் அந்த பாடலை மீண்டும் ரெக்கார்டிங் செய்தோம். எலக்ட்ரானிக்ஸ் இசைக்கருவிகளின் ஆதிக்கம் இல்லாமல் வட இந்திய தபேலா கலைஞர்களை வரவைத்து பாடல் பதிவு செய்தோம்.
குறிப்பாக கவாலி என்ற பார்மெட்டில் காதல் பாடல்களைத்தான் உருவாக்குவதுண்டு. ஆனால் இந்த படத்தில் ஒரு சமையல் பற்றிய பாடலை அந்த பார்மெட்டில் முதன்முறையாக பதிவு செய்திருக்கிறோம் என்றார்.
பிரகாஷ் ராஜ் சினிமா மூலம் நல்ல செய்தியைக் கொடுப்பவர். இந்தப் படமும் நல்ல செய்தியைக் கொண்டு வரும் என நம்புவோம்! வாழ்த்துகள்!
சினிமா என்பது ஒரு பொளுது போக்கு சாதனம்,யாறும் இங்கே ஞானிகள் அல்ல.நாராயண நாராயண.
இவருக்கும் பண ஆசைதான் ,,குளிக்கும்போது இளையராஜாவுக்கு உதித்த யோசனையாம் ! நல்லா கரடி விடுராங்கியா
இந்த பொறப்பு தான் நல்லா ரசிச்சு சாப்பிட கிடைத்தது!மனித பொறப்பு ரசிச்சு சா[ச]ப்பிட பிறந்தது,யாரை மனதில் நிறுத்தி பல்லவி உருவானது மகனையா?