விஜய்-மோகன்லால்-காஜல் அகர்வால் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘ஜில்லா’. இப்படத்தை புதுமுக இயக்குனர் ஆர்.டி.நேசன் இயக்கியிருந்தார். டி.இமான் இசையமைக்க சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பாக ஆர்.பி.சௌத்ரி தயாரித்திருந்தார்.
‘ஜில்லா’ படத்தின் 100-வது நாள் விழா இன்று சென்னையில் நடைப்பெற்றது. இதில் நடிகர் விஜய், நடிகை காஜல் அகர்வால், இயக்குனர் நேசன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இதில் நடிகர் விஜய் பேசும்போது, ‘ஜில்லா’ படம் 100 நாள் ஓடி வெற்றியடைந்தது மிகவும் மகிழ்ச்சி, ரசிகர்களால்தான் இப்படம் பெரிய வெற்றிப்பெற்றது. ரசிகர்களுக்கு ரொம்ப நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பொதுவாக திரைப்படங்கள் பொழுதுபோக்கு படமாக இருக்க வேண்டும்.
ஆனால் தற்போது இயக்கும் புதுமுக இயக்குனர்கள், 3.00 மணி நேரத்திற்கு மேலாக படத்தை இயக்குகிறார்கள். அது ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தும், ஆதலால் திரைப்படத்தை 2.30 மணி நேரத்திற்குள்ளாகவே படங்களை எடுக்க வேண்டுகோள் விடுக்கிறேன்.

























