பெரிய படங்களை பின்னுக்கு தள்ளி 50வது நாளை கடந்தது தெகிடி

tegidyஇந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்தே பெரிய படங்களை விட சிறிய படங்கள்தான் மக்களின் கவனத்தை கவர்ந்திருப்பதோடு வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. ஆண்டின் துவக்கத்தில் கோலிசோடா வசூல் சாதனை நிகழ்த்தியது. இப்போது தெகிடி.

அசோக் செல்வன், ஜனனி அய்யர் நடித்த படத்தை பி.ரமேஷ் என்ற புதுமுகம் இயக்கினார். திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சி.வி.குமார் தயாரித்திருந்தார். ஆக்ஷன் த்ரில்லர் டைப் கதை. க்ரைமாலஜி படித்த ஹீரோவுக்கு துப்பறிவாளனாக வேண்டும் என்பது ஆசை.

இதற்காக ஒரு தனியார் டிடக்டிவ் ஏஜென்சியில் சேருகிறார். அப்புறம் பார்த்தால் அந்த ஏஜென்சியை போலியானது. அவரை அதில் சிக்க வைக்கிறார்கள். அதிலிருந்து அவர் எப்படி மீண்டு வருகிறார் என்பதுதான் கதை. சுமார் 3 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் 50 நாளில் 20 கோடி வரை வசூலித்திருப்தாக சொல்கிறார்கள்.

சென்னையில் சத்யம், எஸ்கேப், ஐநாக்ஸ், தேவி, வளாகங்களிலும், உட்லண்ட்ஸ். சங்கம், பிவிஆர், ஏவிஎம் ரஜேஸ்வரி உதயம், ஐட்ரீம், தியேட்டர்களிலும் ஓடிக் கொண்டிருக்கிறது.

இதுதவிர தமிழ்நாடு முழுவதும் சுமார் 25 தியேட்டர்களில் 50 நாளை கடந்திருக்கிறது. பல பெரிய படங்களை தயாரிப்பாளர்கள் இமேஜுக்காக ஓட்டிக் கொண்டிருக்கும்போது சத்தமே இல்லால் 50 நாளை கடந்திருக்கிறது தெகிடி.