ரஜினி, தீபிகா படுகோனே நடித்துள்ள கோச்சடையான் படம் மோசன் கேப்சன் டெக்னாலஜியில் உருவாகி உள்ள முதல் படம். இந்தப் படம் தெலுங்கில் விக்ரம் சிம்பா என்ற பெயரில் வெளிவருகிறது. இதன் புரமோஷன் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடந்தது. அதில் தாசரி நாராயணராவ், ராமநாயுடு.
நடிகர் மோகன்பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். ரஜினியின் மனைவி லதா, படத்தின் இயக்குனரும் ரஜினியின் மகளுமான சவுந்தர்யா ஆகியோரும் சென்றனர்.
நிகழ்ச்சியில் ரஜினி பேசியதாவது:
இரண்டறை வருடங்களுக்கு முன்பு ராணா படத்தில் நடிக்க வேண்டியது. அப்போது திடீர்னு உடம்பு சரியில்லாம போனதால டாக்டர்கள் நடிக்க கூடாதுன்னு சொல்லிட்டாங்க. அப்புறம் உடம்பு சரியாகி வந்த பிறகு லட்சுமி கணபதி பிக்சர்ஸ் சுப்பிரமணியம் என்னிடம் வந்து கோச்சடையான் கதையை சொன்னார்.
அதை என் மகளே இயக்குவதால் நடிக்க ஒப்புக் கொண்டேன். கடந்த இரண்டரை வருடமாக சவுந்தர்யா சிரமப்பட்டு இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்.
இந்தப் படத்தை 3டியில் பத்து நிமிடங்கள் பார்த்தேன் பெரும் ஏமாற்றம் அடைந்தேன். ஆனால் பத்து நிமிடத்துக்கு பிறகு கதையில் என்னை ஒன்றிப்போக செய்துவிட்டது படம். ஒரு ரசிகனா அனிமேஷன் படம் என்பதையே மறந்து ரசித்து பார்த்தேன்.
பொதுவாக உயிரோடு இல்லாதவங்களைத்தான் அனிமேஷன் படமாக எடுப்பார்கள். நான் உயிரோடு இருக்கும்போதே என்னை வைத்து அனிமேஷன் படம் எடுத்ததை பார்க்கும்போது எனக்கே ஒரு மாதிரியாகத்தான் இருந்தது.
ஆனால் படத்தின் கதையும், விறுவிறுப்பும் என் எண்ணத்தை மாற்றிவிட்டது.
எனக்கு சினிமா டெக்னாலஜி பற்றி எதுவும் தெரியாது. அதை தெரிந்தவர் கமல்தான். எந்திரன், கோச்சடையான் படங்கள் கமல் நடிக்க வேண்டியது. டெக்னாலஜி தெரியாத நான் நடிக்க நேர்ந்தது கடவுள் எனக்கு கொடுத்த பரிசு.
இவ்வாறு ரஜினி பேசினார்.
படம் மொக்கையா இருக்கும் போலே.
கண்டிப்பா இது பெரிய மொக்கைதான்
இனி ரஜினிக்கு இறங்கு முகம்தான் .
ரஜினியே சொல்லும் போது ,படம் எப்படி இருக்குமோ ? குடம்ப உறுப்பினர்களுக்கு ( தம மகளுக்கு ) வாய்ப்பு கொடுத்தால் நக்கி கிட்டு தான் போகும் ,,பாவம் ரஜினி ,தமிழ் இலங்கை மக்களுக்கு உதவியும் ,பிறருக்கு தெரியாமலும் தமிழ் மக்களுக்கு உதவி செய்து இருக்கிறார் ,,ஆண்டவன் கொச்சடையானை வெற்றி பெற செய்ய வேண்டும், படத்தை தயாரித்த பல தமிழர்கள் வாழவேண்டும் .எழுதுபவர்களுக்கும் நல்ல எண்ணங்கள் பிறக்க வேண்டும் ,தமிழன் நண்டாக இருக்க கூடாது ,,,