தெனாலிராமன் படம் தோல்வியா? வெற்றியா?

tenali01வடிவேலு நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்து அண்மையில் வெளியான படம் – தெனாலிராமன். ஏறக்குறைய மூன்று வருடங்களுக்குப் பிறகு, நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு நடித்த படம் என்பதால் தெனாலிராமன் படத்துக்கு பலத்த எதிர்பார்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டது.

ஆனால் தெனாலிராமன் படம் கடந்த வாரம் வெளியானபோது எதிர்பார்த்த அளவுக்கு ஓப்பனிங் இல்லை. அதுமட்டுமல்ல, படத்துக்கு வசூலும் பெரிய அளவில் இல்லை. கொஞ்சம் கூட சிரிப்பே வரவில்லை என்ற நெகட்டிவ்வான டாக் தெனாலிராமனை காலி பண்ணிவிட்டது.

இந்தப் படத்தின் தோல்வியானால் தயாரிப்பாளருக்கு சுமார் 5 கோடி நஷ்டம் உறுதி என்கிறார்கள். தெனாலிராமன் படத்தின் பட்ஜெட்18 கோடி. இந்த 18 கோடியில் வடிவேலுவின் சம்பளம் மட்டுமே 3.5 கோடி. இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் தயாரான தெனாலிராமன் படத்தின் வசூல் ஒட்டுமொத்தமாக 3 கோடியை தாண்டவில்லையாம்.

சாட்டிலைட் ரைட்ஸ் 10 கோடிக்கு விற்கப்பட்டதால் பெருமளவு நஷ்டம் தவிர்க்கப்பட்டதாம். இதற்கிடையில் தெனாலிராமன் படத்தினால் தயாரிப்பாளருக்கு நஷ்டமில்லை. லாபம்தான் என்ற தகவலும் ஒரு தரப்பினரால் கிளப்பி விடப்பட்டிருக்கிறது.

சரி..தெனாலிராமன் படம் தோல்வியா? வெற்றியா?