முன்பெல்லாம் ரஜினி, கமல் நடிக்கிற படங்கள் என்றாலே அப்படங்களின் பூஜையே படு விமரிசையாக நடைபெறும். அதேபோல்தான், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கயிருந்த ராணா படத்தின் பூஜையும் சென்னை ஏவிஎம்மில் கோலாகலமாக நடைபெற்றது. அன்றைக்கு பூஜைக்கு வந்தபோதே அந்த படத்தில் தான் நடிக்கும் ராணா கெட்டப்புடனேயே கலந்து கொண்டார் ரஜினி.
ஆனால், அன்றைக்கு மாலையே திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னையிலுள்ள இசபெல்லா மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார் அதன்காரணமாக அன்றைக்கு மாலை நடைபெற்ற அப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ரஜினி வரவில்லை. கே.எஸ்.ரவிக்குமார், தீபிகா படுகோனே மற்றும் ரஜினி சார்பாக அவரது மகள் சௌந்தர்யா ஆகியோர் மட்டுமே கலந்து கொண்டனர்.
அதையடுத்து, ரஜினியின் உடல்நிலை சீரியசான கண்டிசனுக்கு சென்றதால், பின்னர் ராணா படமே கைவிடப்பட்டது. அதோடு, தனது ஒவ்வொரு படங்களின் பூஜையையும் பரபரப்பாக நடத்தும் ரஜினி, அதன்பிறகு அதிலிருந்து மாறினார். அதிலும் சமீபகால படங்களுக்கு யாருமே பெரிய அளவில் பூஜை நிகழ்ச்சியை நடத்தாததால் தானும் காலத்திற்கேற்ப தற்போது மாறிக்கொண்டுள்ளார்.
தற்போது அவர் நடிக்கும் லிங்கா படத்திற்கு இப்போது உள்ள படங்களுக்கு நடைபெறுவது போலவே படப்பிடிப்பு தளத்தில் சிறிய அளவில் பூஜை நடத்தப்பட்டே படப்பிடிப்பு தொடங்குகிறதாம். அப்போது, ரஜினியின் நெருங்கிய நட்பு வட்டார நடிகர்கள் சிலர் அந்த ஸ்பாட்டுக்கு சென்று அவரை வாழ்த்துகிறார்களாம். ஆக, எளிமையான முறையில் பூஜை நடக்கிறதாம்.
நல்ல மனிதர் ,,வாழ்க வளமுடன்