“கோலிசோடா” சாதனை

golisodaபசங்க கூட்டணி மீண்டும் இணைந்து கொடுத்த வெற்றி படம் தான் “கோலிசோடா”.

பெரிய நடிகர்களின் படங்களே இன்றைய காலக்கட்டங்களில் 10 நாள் தாண்டுவதற்கே 1000 பிரமோசன் செய்ய வேண்டியுள்ள நிலையில், சின்ன “பசங்க” எளிதாக அவர்கள் சாதனையை முறியடித்தனர்.

“திருப்பதி பிரதர்ஸ்” லிங்குசாமி தயாரிப்பில், விஜய் மில்டன் இயக்கத்தில் இந்த வருடம் வெளி வந்த “கோலிசோடா” திரைப்படம் “100”வது நாளை இன்று தொட்டது.

இந்த சந்தோஷ தருணத்தை லிங்குசாமி தன் வலைத்தளத்தில் ரசிகர்களுடன் பரிமாறி உள்ளார்.

இந்த “கோலிசோடா” அடைந்த வெற்றிக்கு “சினி உலகம்” சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்.