ரஜினியின் ‘கோச்சடையான் படம் வருகிற 9–ந் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகிறது. இந்த படம் வெற்றி பெற ராமேஸ்வரம் கோவிலில் ரஜினி ரசிகர்கள் 1008 சங்கு பூஜை நடத்தினார்கள். ராமநாதபுரம் மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற செயலாளர் பாலநமச்சி தலைமையில் இந்த நிகழ்ச்சி நடந்தது.
சிறப்பு விருந்தினராக பரிவார் பவுண்டேஷன் ஜெனரல் மானேஜர் தெய்வம் மற்றும் ரஜினி மன்ற நிர்வாகிகள் சிவகாசி ரமேஷ், மாரி பிச்சை, முருகன், சசிகுமார், குணா, சங்கிலி முருகன், ராமநாதன், பரமக்குடி ஒன்றிய பொறுப்பாளர் ராமச்சந்திரன், கண்ணதாசன் போன்றோர் கலந்து கொண்டனர்.
கோவிலில் சிறப்பு வழிபாடும் நடத்தப்பட்டது. இது குறித்து பால நமச்சி கூறும் போது, ரஜினி உடல் நலம் குன்றி இருந்த போது அவர் நலம் பெற வேண்டி ராமேஸ்வரம் கோவிலில் 3–ம் பிரகாரத்தில் 1008 திருவிளக்கு பூஜை நடத்தினோம்.
தற்போது கோச்சடையான் வெற்றி பெற சங்கு பூஜை நடத்தி உள்ளோம். படம் வெற்றி பெற்றதும், ராமேஸ்வரம் கோவில் ஏர்வாடி, தர்கா, சர்ச்களில் 10 ஆயிரம் பேருக்கு இலவச உணவு வழங்கப்படும்.
விரைவில் ராமேஸ்வரம் தீர்த்தத்தை ஊர்வலமாக எடுத்து போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டில் கொடுப்போம் என்றார்.
கடைசி நேர போரில் ஈழ தமிழ் மரணத்தோடு போராடிய போது இந்த பொறம்போக்குகள் செய்யாத சங்கு பூஜை இப்போது செய்துங்க! அதுவும் சினிமாவுக்கு!!! இதுதான் தமிழன் ஒற்றுமையா??? இன்னும் 1000 வருஷத்திற்கு தமிழன் வந்தேறிகளுக்கு அடிமைதான்……..அதில் எந்த மாற்றமும் இல்லை…….
மானம்கெட்ட மடையர்கள்.. தன் தாய் தந்தையர் நலம் வேண்டி இப்படி ஒரு பூஜையை செய்திருப்பார்களா ???
முதல்ல அங்கு சங்கு பூஜை செய்ய வந்த பூசாரியை செருப்பைக் கழற்றி அடிக்கணும். அப்பத்தான் ஒவ்வொரு பூசாரிக்கும் சமயத்தில் இல்லாத பூஜைகளைச் செய்யக் கூடாது என்ற புத்தி வரும். கூத்தாடி நடிகர்களுக்கும் செருப்பால அடிச்ச மாதிரி இருக்கும். அப்பத்தான் இவனுங்க அவங்க இரசிகர் மன்றத்தினருக்கு சமயத்துக்குப் புறம்பான காரியங்களைச் செய்யக் கூடாது என்று பாடம் புகட்டுவார்கள்.
பிரர் நம்பிக்கையை மதிக்க கற்றுக்கொள்ளவேண்டும்.இங்கே யாவறும் தெரிவிப்பது ஆழ்ந்த அனுதாபமே,அறியாமையை கண்டு,இங்கே இவர்களை ப்ராமணரா,சத்திரியரா,வைசியரா,சூத்திரரா யென்று மக்கள் அடையாலம் காணட்டும்,வாழ்க நாராயண நாமம்.