சந்தானத்தை முற்றுகையிடும பவர்ஸ்டார் ரசிகர்கள்!

SanthanamBஒரு நடிகர் வளருகிறார் என்றால் அவருக்கு ரசிகர்களின் கைதட்டல் அவசியமாகிறது. அதனால்தான் இன்றைய நடிகர்கள் ஓரிரு படங்களில் நடித்ததுமே இளைஞர்களை ஒன்றுதிரட்டி ரசிகர் மன்றம் திறந்து விடுகிறார்கள்.

அந்த ரசிகர்கள் தங்களது அபிமான நட்சத்திரங்களின் படங்கள் திரைக்கு வரும்போது தியேட்டர்களில் கட்அவுட் வைத்து, அதற்கு மாலை, பாலாபிஷேகம் செய்து பரபரப்பு கூட்டும் வேலைகளில் ஈடுபடுகிறார்கள். அதோடு, தியேட்டரிலும் முன் வரிசையில் அமர்ந்து கைதட்டி ஆரவாரம் செய்கிறார்கள்.

அந்த வரிசையில், காமெடி நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் தான், கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்தபோது ஏராளமான ரசிகர்களை திரட்டிக்கொண்டு திரிந்தார். ஆனால், அவர் மோசடி வழக்கில் ஜெயில் கம்பிகளை எண்ணச்சென்று விட்டபோது அவரது ரசிகர்கள் அனைவரும தெறித்து ஓடிவிட்டனர்.

ஆனால் அப்படி ஓடிய பெருவாரியான ரசிகர்கள் இப்போது வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் நாயகனாக அவதரித்துள்ள சந்தானத்துக்கு பின்னால் ஓரணியில் திரண்டு நிற்கிறார்கள்.

தற்போது அப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரடொக்சன் வேலைகளில் துரிதமாக நடந்து வருவதால், விரைவில படம் திரைக்கு வர தயாரகிக்கொண்டிருக்கிறது.

அதனால், தற்போது தான் பிசியாக இருந்தபோதும் ரசிக கோடிகளை அவ்வப்போது சந்திப்பதற்கும் நேரம் ஒதுக்கி வருகிறார் சந்தானம்.

இதையடுத்து, அவரை சந்தித்து அவரது ரசிகர் மன்றத்தில் தங்களை இணைத்துக்கொள்ள ஏராளமான ரசிகர்கள் சந்தானத்தை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். இதனால் சந்தானத்தின் அலுவலகத்தில் எப்போதும் ரசிகர் கூட்டம் பொங்கி வழிகிறது.