வங்கியில் வாங்கிய 40 கோடி கடன் பாக்கி… கோச்சடையான் படத்துக்கு நீதிமன்றம் தடை..

Kochadaiyaanமே 9 ஆம் தேதி வெளிவருவதாக இருந்த கோச்சடையான் படம் வெளிவரவில்லை. தொழில்நுட்பக்கோளாறு காரணமாக திட்டமிட்டபடி வெளியிட முடியவில்லை என்றும் மே 23 ஆம் தேதி படம் வெளியாகும் என்றும் தயாரிப்பு தரப்பினர் அறிவித்தனர். அதை இந்த தேசம் உண்மை என்று நம்பிக்கொண்டிருக்க.. கோச்சடையான் வெளியாகாததற்கான உண்மையான காரணம் தற்போது வெளியாகி இருக்கிறது.

கோச்சடையான் படத்தை தயாரித்த மீடியா ஒன் குளோபல் படநிறுவனம், வங்கியில் கோச்சடையான் படத்தின் மீது 20 கோடி கடன் வாங்கி இருந்ததாம். இந்தப் பணத்தைக் கொண்டு கோச்சடையான் படத்தை ஆரம்பித்தள்ளனர். பட பணிகள் நடைபெற்று வந்தநிலையில் மேலும் பணம் தேவைப்பட்டதால், கோச்சடையான் படத்தை அடமானமாக வைத்து இன்னொரு வங்கியில் 40 கோடி கடன் பெற்றுள்ளார் தயாரிப்பாளர்.

கோச்சடையான் படத்தை வெளியிடுவதற்கு முன் இரண்டு வங்கிகளிலும் வாங்கிய கடனை அடைக்க வேண்டும். அப்போதுதான் க்ளியரன்ஸ் கிடைக்கும். தயாரிப்பாளராகல் 60 கோடியை புரட்ட முடியவில்லை. எனவே படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு கடன் தொகையை செலுத்துவதாக கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது தயாரிப்பாளர் தரப்பில்.

அவரது கோரிக்கையை நிராகரித்த வங்கி நிர்வாகம் கோச்சடையான் படத்துக்கு தடை கேட்டு நீதிமன்றத்தை நாட, தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுவிட்டது.

இதன் காரணமாகவே கோச்சடையான் படம் மே 9 ஆம் தேதி வெளிவரவில்லை.