பார்வையற்றவர்களை சந்தித்து பேசிய ரஜினிகாந்த்

rajinikanth_001நடிகர் ரஜினிகாந்த் கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் உள்ள பார்வையற்றோர் விடுதிக்கு திடீரென சென்று அங்கிருந்தவர்களை சந்தித்து பேசியுள்ளார்.

ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் லி்ங்கா படத்தின் படப்பிடிப்பு கர்நாடகாவில் நடந்து வருகிறது.

இதற்காக ரஜினிகாந்த் மாண்டியாவில் முகாமிட்டு படப்பிடிப்புகளில் பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில், மாண்டியா மாவட்டத்தில் உள்ள மேல்கோட்டை பகுதியில் அமைந்துள்ள பார்வையற்றோர் விடுதிக்கு நேற்று திடீரென ரஜினிகாந்த் சென்றுள்ளார்.

அப்போது, ரஜினியின் வருகையை அறிந்து பார்வையற்றோர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். அவர்களிடம் பேசிய ரஜினிகாந்த், பார்வையற்றோர்களின் வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டுள்ளார்.