நீண்ட இடைவெளிக்கு பிறகு வடிவேலு நடித்த தெனாலிராமன் படம் சமீபத்தில் வெளியானது. இப்படத்தை யுவராஜ் தயாளன் இயக்கி இருந்தார்.
படம் போட்ட வசூலை அள்ளியதா, இல்லையா என்ற பட்டிமன்றம் ஒரு புறம் நடந்து கொண்டிருக்க. தயாரிப்பாளரோ போட்ட துட்டு வந்துவிட்டதாகச் சொல்லுகிறார். ஆனால் வடிவேலு தரப்போ தனக்கு கிடைத்துள்ள இந்த ஓபனிங்கைப் பார்த்து மகிழ்ந்துபோனதோடு மட்டுமல்லாமல், மீண்டும் யுவராஜ் தயாளன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறது.
இந்தப் படத்தை வடிவேலு சொந்தமாக தயாரிக்கலாம் எனக் கூறப்படுகிறது. இது தெனாலிராமன் போன்று சரித்திரகால படம் இல்லையாம், அதேசமயம் பேண்டஸியான படம்தான். 18ம் நூற்றாண்டில் துவங்கி 2015ல் முடிகிற மாதிரியான ஒரு புதுமையான கதையாம். ஜுலை மாதம் முதல் படப்பிடிப்பு துவங்குகிறது.
தெனாலிராமன் படத்துக்கு பிறகு வடிவேலு சிம்புதேவன் இயக்கதில் இம்சை அரசன் 22ம் புலிகேசியின் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பினாராம். ஆனால் சிம்புதேவன் அடுத்து விஜய் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதால் இந்த படத்தை துவக்கச் சொல்லிவிட்டார்.