மூன்று மாதங்களுக்கு பிறகு பூரண குணமடைந்தார் ராகவா லாரன்ஸ்!

ragavendra-temple-22கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கங்கா (முனி&3) படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார் ராகவா லாரன்ஸ். அவருக்கு மூளை நரம்பு பாதிப்பு இருப்பதை டாக்டர்கள் கண்டுபிடித்தனர். கடந்த மூன்று மாதங்களாக சிகிச்சையில் இருந்த ராகவா லாரன்ஸ் இப்போது பூரண குணம் பெற்றிருக்கிறார். இன்னும் ஒரு சில நாட்களில் மீண்டும் படப்பிடிப்பை துவக்குகிறார்.

குணமடைந்த ராகவா லாரன்ஸ் இதுபற்றி கூறியிருப்பதாவது: சில வருடங்களுக்கு முன்பு ஸ்டைல் படப்பிடிப்பில் சண்டைக் காட்சியில் நடித்தபோது கழுத்தில் சுழுக்கு ஏற்பட்டது. சாதாரண சுழுக்கு தானே என்று நான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அப்புறம் ஒரு நாள் தூங்கிட்டு இருந்தபோது திடீர்னு ஒரு கை உடம்புல இருந்து விலகி தனியா தொங்குற மாதிரி பீலிங் இருந்திச்சு. உடனே டாக்டர்கிட்ட காட்டினப்போ கழுத்து எலும்பு லேசா நகர்ந்திருக்கு ஒரு மாதம் ரெஸ்ட் எடுக்கச் சொன்னார். கங்கா படம் ஷூட்டிங் இரவு பகல்னு பிசியா போயிட்டிருந்ததால ரெஸ்ட் எடுக்க முடியல.

ஒருநாள் ஒரு நடிகர் வேகமாக நடந்து வந்து திரும்புகிற காட்சி எடுத்தேன். அதில் அவருக்கு சரியாக நடிக்க வரவில்லை. பல டேக்குகள் போனது நானே வேகமாக நடந்து வந்து திரும்பிக் காண்பித்தேன். அவ்வளவுதான் அதற்கு பிறகு என்ன நடந்தது என்பதே தெரியாது மருத்துவமனையில் இருந்தேன். மூணு மாசத்துக்கு பிறகு மறுபிறவி எடுத்திருக்கிறேன். என் அம்மாவோட, அன்பு, என் ஆசிரம குழந்தைகளோட பிரார்த்தனை, ராகவேந்திரரோட கருணை என்னை காப்பாத்தியிருக்கு. ரஜினி சார் அடிக்கடி போன் பண்ணி நலம் விசாரிச்சது ரொம்ப ஆறுதலா இருந்திச்சி. இனி அடுத்த வேலைகளை கவனிக்க வேண்டியதுதான் என்கிறார் லாரன்ஸ்.