கோச்சடையானுக்கு நஷ்டஈடு வழங்கப்படும்! ரஜினி திடீர் அறிவிப்பு!!

kochadayan 1செளந்தர்யா இயக்கத்தில், ரஜினி நடித்துள்ள கோச்சடையான் அனிமேஷன் படம் எப்போதோ ரிலீசுக்கு தயாராகி விட்டது. ஆனால், படத்தின் பட்ஜெட் அதிகம் என்பதால் பேரம் படியாமல் பல மாதங்களாக அவர்களுக்கும், தியேட்டர்காரர்களுக்குமிடையே பேச்சுவார்த்தை நீடித்துக்கொண்டே இருந்தது. குறிப்பாக, கோச்சடையான் அனிமேஷன் படம் என்பதால், அதிக தொகை கொடுத்து வாங்கும் எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பு என்று சில தியேட்டர்காரர்கள் ஈராஸ் நிறுவனத்திடம் கேட்டு வந்தார்களாம்.

இதற்கிடையே வங்கி லோன் பிரச்சினை இன்னொரு பக்கம். ஆக, மே 9-ந்தேதி வெளியாகயிருந்த கோச்சடையானை பின்னர் 23-ந்தேதிக்கு மாற்றினர். இந்த நிலையில். வங்கி பிரச்சினை முடிவுக்கு வந்தபோதும், தியேட்டர்காரர்கள் பிரச்சினைதான் சுமூக முடிவை எட்டாமல் இருந்திருக்கிறது. அவர்களின் மனநிலையை புரிந்து கொண்ட ரஜினி, இனியும் படத்தை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டால் சரிவராது என்று முடிவுக்கு வந்தாராம்.

அதையடுத்து, தியேட்டர் உரிமையாளர்களை சந்தித்து, ஒருவேளை கோச்சடையான் உங்களுக்கு நஷ்டத்தை கொடுத்தால், லிங்காவைத் தொடர்ந்து நான் நடிக்கும் படத்திற்கு வாங்கும் 20 கோடி சம்பளத்தை நஷ்டப்பட்டவர்களுக்கு பகிர்ந்தளித்து விடுகிறேன் என்று வாக்குறுதி அளித்திருக்கிறாராம். இதனால் இத்தனை நாளும், கோச்சடையான் கையை கடித்து குதறி விடுவாரோ என்று பயந்து கொண்டிருந்த தியேட்டர் உரிமையாளர்கள் இப்போது கில்லியாட்டம் 23-ந்தேதியில் படத்தை திரையிட அதிரடியாக களத்தில் இறங்கி விட்டனர்.