கானா தேடும் இயக்குனர்கள் இசை அமைப்பாளர் தேவா கோபம்

Deva-reel-19சென்னை: என்னை கிண்டல் செய்தவர்கள் இன்று கானாவை தேடி ஓடுகிறார்கள் என்றார் தேவா. மல்லுவுட் காமெடி நடிகர் பிரவின் பிரேம் ‘டம்மி டப்பாசுÕ படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். ரம்யா பாண்டியன் ஹீரோயின். கடந்த 3 வருடமாக சினிமாவில் இசை அமைக்காமல் ஒதுங்கி இருந்த தேவா இப்படத்துக்கு இசை அமைக்கிறார். அவர் கூறியதாவது: சினிமாவிலிருந்து  விலகி அம்மன் பாடல்கள், டி.வி.சீரியலுக்கு இசை அமைத்துக்கொண்டிருந்தேன். புதுமுகங்களை வைத்து மத்திய சென்னை குடிசை பகுதியை சுற்றி நடக்கும் யதார்த்தமான காமெடி படமிது.

இப்படத்துக்கு இசை அமைக்க வேண்டுமென்று டைரக்டர் ரவி. ஓ.எஸ் கேட்டதுடன் கானா பாணியில் பாடல்கள் தேவைப்படுகிறது என்றார். ஒப்புக்கொண்டேன். ‘விதவிதமா சோப்பு சீப்பு கண்ணாடி ‘அண்ணாநகர் ஆண்டாளு அயனாவரம் கோபாலு என நான் இசை அமைத்த கானா பாடலை ஒரு சில இயக்குனர்கள் கிண்டல் செய்தனர். இன்று பல படங்களுக்கு கானா பாடகர்களை தேடி ஓடுகின்றனர். சினிமாவில் புதுமையை ஒதுக்க நினைத்தால் அது திரும்ப வரும். இவ்வாறு தேவா கூறினார்.