இலங்கையில் விடுதலைப்புலிகளின் தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளராக இருந்த இசைப்பிரியாவின் படுகொலை திரைப்படமாக தயாரிக்கப்படுகிறது.
இசைப்பிரிய ஈழத்தமிழர் விடுதலைக்கான எழுச்சி பாடல்களையும் பாடிவந்தார்.
இசைப்பிரியாவை இறுதிக் கட்ட போரில் சிங்கள இராணுவத்தினர் கொடூரமாக படுகொலை செய்தனர்.
அவரது வாழ்க்கை கதை ‘போர்க்களத்தில் ஒரு பூ’ என்ற பெயரில் படமாகிறது.
இதில் இசைப்பிரியா வேடத்தில் பிரியா நடிக்கிறார். நாயகனாக பாலாஜி நடிக்கிறார்.
பிரபாகரன், சுமந்தனி, சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோரும் நடிக்கின்றனர்.இப்படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம், எழுதி கு.கணேசன் இயக்குகிறார்.
இசைப்பிரியாவின் வாழ்க்கை கதை நெஞ்சை உருக்கும் சம்பவங்களுடன் படமாகிறது என்றும் இப்படத்துக்கு இளையராஜாவின் இசை உயிர் கொடுத்துள்ளது என்றும் இயக்குனர் கணேசன் கூறினார்.
இப்படத்தின் பாடல்கள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் இளையராஜா, நடிகர்கள் நந்தா, விவேக், டைரக்டர் பேரரசு, ஜாகுவார் தங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அடுத்த தலைமுறைக்கு சரித்திரம்……..!
அட மடையனுங்க்கள ,இசை பிரிய வாழ்க்கையை படமாக்குவதை வீட ,அவரை கொன்றவனை பலிக்கு பலி வாங்க பாருங்கடா ,முட்டாள்கள ,,படமா ஆக்குரானுங்கலாம் படம்
இசை பிரியாவுக்கு என்ன நடந்தது என்று தெரியாத சில … இந்த படம் அவசியமாகிறது மோகன் மோகன் !