நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுந்தர் சி இயக்கி நடிக்கும் படம் அரண்மனை. இந்த படத்தில் ஹன்சிகா, ஆண்ட்ரியா, லட்சுமி ராய் ஆகிய மூன்று முன்னணி நடிகைகள் நடிக்கிறார்கள்.
மற்றும் இவர்களுடன் சேர்ந்து வினய், சந்தானம், சரவணன், கோவைசரளா, மனோபாலா, காதல் தண்டபாணி, கோட்டா சீனிவாசராவ், சித்ரா லட்சுமணன், நிதின் சத்யா என பெரிய நட்சத்திர பட்டாளமும் நடிக்கின்றனர். பரத்வாஜ் இசையமைக்கிறார். விஷன் ஐ மீடியாஸ் நிறுவனம் சார்பில் டி.தினேஷ் கார்த்திக் தயாரிக்கிறார். மன்னர் காலத்து சொத்தான பெரிய அரண்மனையில் நடக்கும் திகிலான சம்பவங்களை மையப்படுத்தியே படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளதாம்.
இது குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் சுந்தர்.சி கூறியதாவது, நகைச்சுவை பாணியில் இருந்து மாறி முதன்முறையாக காமெடி கலந்த திகில் படத்தை எடுத்திருக்கிறேன். பெரும்பாலான திகில் படங்கள் எல்லாம் பங்களாவை சுற்றித்தான் அமைந்திருக்கும். அந்த மாதிரிதான் இந்தப் படத்தின் கதையும் அரண்மனையை சுற்றியே நகரும். தற்போது பெண்களுக்கும் திகில் படங்கள் என்றால் மிகவும் பிடிக்கின்றனர்.
தொடர்ந்து பத்திரிகையாளர்கள் கேள்விக்கும் சுந்தர் சி பதிலளித்தார். அதில் “திரும்பவும் வடிவேலு உங்களது படத்தில் நடிப்பாரா..?” என்கிற கேள்விக்கு, “இல்லை சார்.. அதுக்கெல்லாம் வாய்ப்பில்லை..” என்றார். ஆனால் அதற்கான காரணத்தைச் சொல்ல மறுத்துவிட்டார்.
சந்தானத்தை ஏன் நடிக்க வைத்தீர்கள் என்று கேட்டதற்கு, ‘சந்தானத்தை வைத்து படம் பண்ணும்போது சௌகரியமாக இருக்கிறது. குறிப்பாக இதுவரை நடித்த எந்தப் படத்திலும் சம்பளம் பற்றி எதுவும் பேசியது கிடையாது. உங்களுக்கு எது நியாயம்ன்னு தோணுதோ அதைக் கொடுங்கன்னு மட்டும் சொல்றாரு. இதைவிட ஒரு தயாரிப்பாளருக்கு வேறென்ன வேணும்..?”. அது எனக்கு மிகவும் பிடித்தது. அடுத்ததாக எடுக்க போகும் படத்திலும் சந்தானத்தை நடிக்க வைக்க பேசி வருகிறேன்” என்றார்.
இப்போது புரிந்திருக்குமே வடிவேல்-சுந்தர் சி கூட்டணி பிரிந்ததற்கான காரணம் என்னவென்று..! ஆமாங்க எல்லாம் அந்த பணம்தான். சுந்தர் சி முதன் முறையாக தனது வழக்கமான காமெடி பாணியில் இருந்து விலகி அரண்மனை படத்தில் திகிலுடன் காமெடியும் கையில் எடுத்திருப்பதால் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
“எது நியாயம்னு தோணுதோ அதைக் கொடுங்கள்” என்பது சாதாரண விஷயமல்ல. ஒரு காலக்கட்டத்தில் காலஞ்சென்ற நடிகர் ஜெயசங்கர் இப்படி விட்டுக்கொடுத்துப் போவாராம். நல்ல குணம் தான்!
சந்தானம் ! ஆரம்பம் – எதகொடுதாலும் போதும் ! இவரும் ஒருநாள் அதை கேட்பார் !! கொடுத்துதானே ஆகவேண்டும் ?