ஹீரோ ஆக முடியாததால் 12 வருடம் நடிப்புக்கு முழுக்கு போட்ட நடிகர்

nalinikanthசென்னை: ‘முந்தானை முடிச்சு, ‘ராசுக்குட்டி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் நளினிகாந்த். ‘யாமிருக்க பயமே படத்தில் 12 வருடத்துக்கு பிறகு நடிக்க வந்திருக்கிறார்.

இது பற்றி அவர் கூறும்போது, ‘ரஜினியும் நானும் ஒரேகால கட்டத்தில் நடிக்க வந்தோம். அவர் எனக்கு நல்ல நண்பர். நளினிகாந்த் என்று தாசரி நாராயணராவ் எனக்கு பெயர் வைத்தார். அழைத்தால் வருவேன், தேன்சிட்டுக்கள், காதல் காதல் காதல் என 3 படங்களில் ஹீரோவாக நடித்தேன்.

ஹீரோவாக மட்டுமே இனி நடிப்பது என்று எண்ணினேன். ஆனால் ஏற்கனவே நடித்த படங்கள் தோல்வி அடைந்ததால் ஹீரோ வாய்ப்பு வரவில்லை. தொடர்ந்து வில்லன் உள்ளிட்ட பிற வேடங்களில் நடிக்கவே வாய்ப்பு வந்தது.

அதை ஏற்காமல் நடிப்பை விட்டே விலகி டி.வி. சீரியல்கள் தயாரித்தேன். 12 வருடம் ஒதுங்கி இருந்த என்னை ‘யாமிருக்க பயமே படத்தில் முதியவராக நடிக்க அழைத்து வந்தார் இயக்குனர் டி.கே. எனது ஹீரோ லட்சியம் நிறைவேறவில்லை என்றாலும் தொடர்ந்து வில்லன், குணசித்ர வேடங்களில் இனி நடிப்பேன் என்றார்.