சந்தானம் முழுநேர காமெடியனாக இருந்தபோது படத்துக்குப்படம் அவரது சம்பளம் உயர்ந்து கொண்டிருந்தது. சம்பளத்தை அதிகமாக கொடுத்தால்தான் கால்சீட் தருவார் என்று அவராக கேட்காமலேயே சில படாதிபதிகளே அவரது படக்கூலியை உயர்த்தி விட்டனர்.
பின்னர் அவர்களே சந்தானம் படத்துக்குப்படம் சம்பளத்தை உயர்த்க்கொண்டேஇருக்கிறார் என்று குறை சொன்னதும் நடந்திருக்கிறது.
இந்த நிலையில், எதையும் கண்டுகொள்ளாமல், என் கடன், பணி செய்து கிடப்பதே என்பது போல் தன்னைப்பற்றி வந்த குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித பதிலும் சொல்லாமல் சதா காமெடியைப்பற்றியே யோசித்துக்கொண்டிருந்த சந்தானம், தற்போது கோடம்பாக்கத்தின் காமெடி கிங்காகி விட்டார்.
ஹீரோவாக நடித்த படமும் கையை கடிக்காமல் ஹிட்டடித்து விட்டதால், எஸ்கேப்பாகி விட்டார் சந்தானம.
அதனால், இப்போது இன்னும் அவரது படக்கூலி எகிறியுள்ளது. ஒரு நாளைக்கு 10 லட்சம் அல்லது அதற்கு மேலும் கேட்கிறாராம். ஆனால், இன்றைக்கு இருக்கிற சூழ்நிலையில் வேறு சரியான காமெடியன் யாரும் இல்லாததால் சந்தானம் கேட்ட பணத்தை சொல்லியடிக்க படாதிபதிகள் போட்டி போடுகின்றனர்.
ஆக, ஹீரோவுக்கு முன்பும், ஹீரோவுக்கும் பின்பும் சந்தானத்தின் மார்க்கெட் பரபரப்பாகவே இயங்கிக்கொண்டிருக்கிறது.
ஐயோ வேண்டாம் ஐயா சம்பளத்தை வெளி இடாதேங்க ,அப்புறம் தமிழனுங்க இவரையும் எந்த ஜாடி காரன் என்று விளாசு விளாசுன்ன விலாசிடுவாணுங்க
தமிழன் முட்டல்கேள் இருக்கும் வரை சினிமா எப்படித்தான் இருக்கும்
விரைவில் இந்த அழுக்கு நகைச்சுவை பிறவிக்கு தமிழா நாடு முண்டங்கள் கோவில் கட்டும் ..இவனின் வாயில் இருந்து வரும் வசனங்களை ..அம்மா ..தங்கை ..அக்கா இவர்கள் அருகில் இருக்க கேட்கமுடியுமா ???
நீங்க சதா சொல்லிக்கொண்டே இருங்கோன்னா .. அவாள் கிங் ஆயடுவான்னோ …