யுவன்சங்கர்ராஜாவின் ராசியான ஒலிப்பதிவுக் கூடம் மூடப்பட்டது!

Yuvan-Shankar-Rajaபிஸி இசையமைப்பாளராக யுவன்சங்கர்ராஜா இருந்தபோது அவரது ஆஸ்தான ஒலிப்பதிவுக் கூடமாக இருந்தது – கலச என்ற ரெக்கார்டிங் தியேட்டர்! சில வருடங்களுக்கு முன்புவரை பரபரப்பாக இருந்த இந்த ரெக்கார்டிங் தியேட்டர் தற்போது மூடப்பட்டுவிட்டது! சென்னையிலேயே அதிநவீன கருவிகளைக் கொண்ட ஒலிப்பதிவுக்கூடம் என்று பெயர் பெற்றிருந்த கலச தியேட்டர் மூடுவிழா காண யார் காரணம் தெரியுமா? யுவன்சங்கர்ராஜாதான்…!

பிஸியான இசையமைப்பாளராக இருந்தபோது, பேக்கேஜிங் சிஸ்டத்தில்தான் படங்களை ஒப்புக்கொண்டார் யுவன்சங்கர்ராஜா. அதாவது தன் சம்பளம் மட்டுமின்றி, பாடலாசிரியர் சம்பளம், ரெக்கார்டிங் தியேட்டருக்கான வாடகை, இசைக்கலைஞர்களின் சம்பளம் என எல்லாவற்றுக்கும் சேர்த்து தயாரிப்பாளரிடமிருந்து ஒரு தொகையை வாங்கிக் கொள்வதுதான் – இந்த பேக்கேஜிங் சிஸ்டம்.

பேக்கேஜிங் என்ற பெயரில் சம்பளம் வாங்கிய யுவன்சங்கர்ராஜா, ரெக்கார்டிங் தியேட்டருக்கான வாடகையைக் கொடுக்கவில்லையாம். ரெக்கார்டிங் தியேட்டருக்காக அதன் உரிமையாளர் வங்கியில் வாங்கிய கடனுக்கான வட்டி குட்டி போட்டுக் கொண்டே போனது. ஒரு கட்டத்தில் கடன் கொடுத்த வங்கிகள் பணத்தைக் கேட்டு பிரச்சனை செய்ய, அதுவரை யுவனிடம் பாக்கியை கேட்காத ரெக்கார்டிங் தியேட்டர் நிர்வாகம், தங்களுக்கு தர வேண்டிய சில லட்சங்களைக் கேட்டிருக்கிறது.

என்னால்தானே உங்கள் தியேட்டரே பிஸியாக இருக்கிறது? என்னிடம் எப்படி நீங்கள் பாக்கிப்பணத்தைக் கேட்கலாம்? என்ற கடுப்பாகி இருக்கிறார் யுவன்சங்கர்ராஜா. அதோடு, கலச தியேட்டரிலிருந்தும் வெளியேறிவிட்டார். அதன் பிறகு கலச தியேட்டர் பக்கம் யுவன் வருவதே இல்லை. அவர் வராமல்போனதால் தியேட்டருக்கு வருமான இழப்பு….! இன்னொரு பக்கம், யுவனின் விருப்பப்படி நவீன கருவிகள் வாங்குவதற்காக வங்கியில் வாங்கிய பல கோடி கடன் பூதாகரமான பிரச்சனையாக உருவெடுத்தது. வேலை இல்லாததினால் ஊழியர்களும் போய்விட்டனர். எத்தனையோ சூப்பர்ஹிட் பாடல்கள் உருவான இடமான கலச ரெக்கார்டிங் தியேட்டர் தற்போது மூடப்பட்டதால் ஏரியாவே வெறிச்சோடிக்கிடக்கிறது!