இளையராஜா சினிமாவில் பிசியாக இசையமைத்து வந்தபோது, அவருக்கு ரசிகர் மன்றம் வைப்பதற்கு பலர் நான் நீயென்று போட்டி போட்டனர். ஆனால், அப்படி வந்த யாருக்கும அவர் அனுமதி கொடுக்கவில்லை. அதையும மீறி மன்றம் திறந்தவர்கள் மீது வழக்குப்போட்டு அந்த மன்றங்களை மூட வைத்தார். அந்த அளவுக்கு ரசிகர் மன்றம் திறப்பதற்கு எதிர்ப்பு காட்டி வந்தார் இளையராஜா.
ஆனால், தற்போது என்ன ஆனதோ, அவரே ரசிகர் மன்றத்தை திறந்துள்ளார். சமீபத்தில் மதுரையில் நடந்த ராஜாவின் சங்கீத திருநாள் இசை நிகழ்ச்சியில் ரசிகர் மன்றம் துவக்கப்பட்டது. பல ஊர்களில் அவரது ரசிகர் மன்றங்கள் செயல்படத் தொடங்கியுள்ளன. ஆனால், இந்த மன்றங்களை தனது வளர்ச்சிக்கோ, சுயலாபத்துக்கோ அவர் ஆரம்பிக்கவில்லையாம். சமூக சேவைகள் செய்யும் நோக்கத்தில்தான் இதை ஆரம்பித்திருக்கிறாராம்.
அந்த வகையில், வருகிற ஜூன் 2-ந்தேதி இளையராஜாவுக்கு 71வது பிறந்தநாள் ஆகும். அதையொட்டி, தமிழகத்திலுள்ள பல ஊர்களில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மொத்தம் 71 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு அவற்றை இளையராஜாவின் ரசிகர் மன்றத்தினர் பராமரிக்க உள்ளார்களாம். இதேபோல் தொடர்ந்து மக்களுக்கு பயனுள்ள நற்பணிகளை இளையராஜாவின் ரசிகர் மன்றம் தொடர உள்ளதாம்.
நீ இப்பதான் மனிதன் என்று நிருபித்து இருகிறாய்