நடிகர், நடிகைகள் அபரிமிதமாக சம்பளம் பெறுவதை குறைத்துக் கொள்ள வலியுறுத்தல்

cinemaதிரைப்படத் தொழிலைக் காக்க நடிகர், நடிகைகள் அபரிமிதமாக சம்பளம் பெறுவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என மதுரை, ராமநாதபுரம் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் சங்கத் தலைவர் ஆர்.செல்வின்ராஜ் தலைமையில் நடைபெற்றது. கெüரவத் தலைவர் ஜி.என்.அன்புச்செழியன் முன்னிலை வகித்தார்.

தமிழ்த் திரைப்படத்துறையினருக்கான நலவாரிய திட்டத்தின்கீழ், சங்க உறுப்பினர்கள் 50 பேருக்கு உதவித்தொகை வழங்கியதற்கு தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திரையரங்க நுழைவுக் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக ஏற்கெனவே கொடுத்த மனு மீது உரிய நடவடிக்கை எடுத்து நுழைவுக் கட்டணத்தை உயர்த்தித் தருமாறு மாவட்ட ஆட்சியருக்கு வேண்டுகோள் விடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திரைப்படங்களுக்கான விலை அபரிமிதமாக உயர்ந்துவிட்டது. ஆனால், அந்த திரைப்படங்களின் வசூல் மிகவும் சுமாராகவே இருக்கிறது. பெரிய அளவில் முதலீடு செய்யும் விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் ஏற்படுக்கிறது. நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தங்களது சம்பளத்தை அபரிமிதமாக உயர்த்துவதே, திரைப்படங்களின் விலை அதிகமாவதற்கு காரணமாக இருக்கிறது. ஆகவே, அதிகமாக சம்பளம் பெறும் நடிகர், நடிகைகள் தங்களது சம்பளத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.