இசைஞானி இளையராஜா (ஜூன் 2ம் தேதி) தனது 71வது பிறந்தநாளை வெகு விமரிசையாக கொண்டாடினார். தேனி மாவட்டம், பண்ணைபுரத்தில் பிறந்தவர் இளையராஜா.
அன்னக்கிளி படம் மூலம் இசையமைப்பாளராக தனது இசைப்பயணத்தை தொடங்கிய இளையராஜா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இசையமைத்து, இசைக்கே ‘ஞானி’யாக திகழ்கிறார். தற்போது அவர் இசையமைத்து வரும் பாலாவின் ”தாரை தப்பட்டை” படம் அவரது ஆயிரமாவது படம் என்பது சிறப்புக்குரியது.
இந்நிலையில் இசைஞானி இன்று தனது 71வது பிறந்தநாளை வெகு சிறப்பாக கொண்டாடினார். எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்தாண்டு இவரது பிறந்தநாள் விமரிசையாக கொண்டாடப்பட்டது.
சமீபத்தில், மதுரையில் நடைபெற்ற ராஜாவின் சங்கீத திருநாள் நிகழ்ச்சியுடன், இளையராஜா ரசிகர் மன்றமும் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.
துவங்கப்பட்ட ஒரு மாத காலத்துக்குள்ளாகவே இந்த ரசிகர் மன்றத்தில் கவிஞர்கள், பாடகர்கள், பாடகியர், இசைக்கலைஞர்கள் என சுமார் ஒரு கோடி பேர் அங்கத்தினராக பதிவு செய்துக் கொண்டுள்ளனர்.
மேலும் இவரது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட ரசிகர்கள் முடிவு செய்தனர். தமிழ்நாடு முழுவதும் 71,001 மரக்கன்றுகளை நட அவரது ரசிகர் மன்றத்தினர் ஏற்பாடு செய்தனர். அதன்படி இளையராஜாவின் பிறந்தநாளான இன்று தமிழகம் முழுக்க இளையராஜாவின் ரசிகர்கள் 71,001 மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர்.
இதனிடையே சென்னை பிரசாத் லேப்பில் இளையராஜாவின் பிறந்தநாள் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது. இதில் இளையராஜா பங்கேற்றார்.
அப்போது இளையராஜா கேக் வெட்டி தனது பிறந்தநாள் விழாவை கொண்டாடினார். மேலும் விழாவில் வாசகர்களின் கேள்விகள் அடங்கிய புத்தகமும், இளையராஜா பாடல் எழுதிய பள்ளி எழுச்சி பாடல் புத்தகமும் வெளியிடப்பட்டது.
வாசகர்கள் கேள்வி புத்தகத்தை இளையராஜாவை, அன்னக்கிளி படத்தில் அறிமுகம் செய்த தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் வெளியிட, இயக்குநர் பாலா பெற்றுக்கொண்டார்.
பள்ளி எழுச்சி பாடல் புத்தகத்தை, எழுத்தாளர் ராமகிருஷ்ணன் வெளியிட சுபா பெற்றுக்கொண்டார். மேலும் இந்த விழாவில் பிரசாத் லேப் வளாகத்தில் 71 ஆயிரத்து 1-வது மரக்கன்றை இளையராஜா நட்டு வைத்தார்.
இளையராஜாவின் 71வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் பஞ்சு அருணாச்சலம், பாலா, பார்த்திபன், கவிஞர் முத்துலிங்கம், மேத்தா, பழனிபாரதி உள்ளிட்ட ஏகப்பட்ட திரை நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.
வாழ்த்துகள்.
இத்தனை மரக்கன்றுகளை நட்டதற்கு பாராட்டுதலும் வாழ்த்துக்களும். இசைஞானியை வாழ்த்த வயதில்லை.
உங்கள் கலைத்துறை சேவை தொடர இறைவன் நீண்ட ஆயுளை வழங்க பிராத்தக்கிறேன்.
குப்பைத்தொட்டி இந்தியாவிற்கு அதிகம் தேவைப்படுவதில் முக்கியமான இரண்டு – எங்கும் நிறைய பசுமையான மரங்கள், போதுமான அளவில் சற்று தூய்மையான கழிவறைகள். அதிக கழிவறைகள் கட்ட போதுமான நீர் வசதி இல்லை என்பர். எங்கும் பசுமையான மரங்கள் வளர்த்தால்தானே மழை சற்றுகூடி நீர்வளம் பெருகும். மரங்கள் நடுவது ஒரு மாபெரும் தேசிய சேவை.
மகனை முறையாக வளர்க்க தெரியாத இவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் வேற.? மதம் மாறிய மகனுக்காக இவர் ஒட்டு மொத்த தமிழர்களிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும்.மான முள்ள இளையராஜா செய்வாரா?
டேய் தெனாலி..முதல்லே நீ தெனாலி என்ற பேரை மாற்று அந்த பேரின் சொந்தகாரர் பாவம் இப்போது இல்லை….! அதக்கு நீ தகுதியும் இல்லை…!
மதம் மாறுவது அது அவர் அவர் சொந்த விருப்பம்..அதாவது நீ உன் பேரை தெனாலி என்று வந்து கொண்டது எப்படி உன் சொத்த விருப்பமோ…. அது போல தான் ..!
மண்டி இட்டு மன்னிப்பு கேக்க நீ உண்ணும் போதனும் இல்லை ஏசுவும் இல்லை…ஆப்ற்றோல் நீ ஒரு வெறும் வெட்டி பக்கி பய..உனக்கெல்லாம் மரியாத கேக்குதோ …!
பன்னாட பரதேசி…!!!
விஷ் யு ஹாப்பி பிரத் டே அய்யா