இந்தியாவின் முதல் மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில் உருவான படம் என்ற பெருமையான விளம்பரத்துடன் வெளிவந்த படம் ‘கோச்சடையான்’. ஆனால், படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு மோசமான கேப்சிரிங் தொழில்நுட்பத்துடன் வந்த படம் என்ற பெயரையே பெற முடிந்தது.
படம் வெளியாகி இன்றுடன் இரண்டு வாரம் ஆகி விட்ட நிலையில் 90 சதவீத திரையரங்குகளில் படத்தை தூக்கி விட்டார்களாம். சில ஊர்களில் வெளியான ஒரு சில நாட்களிலேயே படத்தை எடுத்து விட்ட நிலையும் ஏற்பட்டுள்ளது.
தொலைக்காட்சிகளில் குழந்தைகள் சேனலில் வரும் அனிமேஷனை விட இந்த படத்தின் அனிமேஷன் மோசமாக அமைந்ததே படத்திற்கு வரவேற்பு இல்லாததற்குக் காரணம் என்கிறார்கள். அதோடு படத்தின் பிரமோஷனுக்கு படத்தின் நாயகியான தீபிகா படுகோனே உட்பட பலரும் வரவேயில்லை.
படத்தைப் பார்த்ததும் தீபிகா, நொந்து போய்விட்டாராம். தன்னை இந்த அளவிற்கு அலங்கோலமாக காட்டுவார்கள் என அவர் எதிர்பார்க்கவில்லை என அவர் புலம்பித் தள்ளிவிட்டார் என்கிறார்கள். அதனால்தான் அவர் படத்தின் எந்த பிரமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவில்லையாம். இந்த விஷயத்தில் தீபிகா மீது ரஜினிகாந்த் கோபமாக உள்ளார் என்கிறார்கள்.
ரஜினிகாந்தே படத்தின் வெளியீட்டிற்கு முன் ‘ட்விட்டர்’ கணக்கையெல்லாம் ஆரம்பித்து பரபரப்பூட்டியவர், அதன் பின் ஒன்றுமே செய்யவில்லையே என்றும் சிலர் சொல்கிறார்கள்.
மே 5ம் தேதி ட்விட்டர் கணக்கை ஆரம்பித்த ரஜினிகாந்த் இதுவரை போட்ட ட்விட்டரில் இரண்டு இரண்டுதான் ‘கோச்சடையான்’ சம்பந்தப்பட்டது.
அதிலும் அவையிரண்டுமே வெறும் வாழ்த்துச் செய்திதான். அவரே படத்தைப் பற்றி பிரமாதமாகப் பேசாத நிலையில் தீபிகாவை மட்டும் குறை சொல்வது நியாயம் இல்லை என்கிறார்கள் சிலர்.
இப்படி ஒரு மோஷன் கேப்சரிங் படத்தைக் கொடுத்து இந்திய திரைக்கலைஞர்களின் திறமையை கேவலப்படுத்தியிருக்கக் கூடாது என்று சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனமே படத்திற்குக் கிடைத்துள்ளது. ‘சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்’ என்ற பழைய பழமொழியையும் ‘கோச்சடையான்’ படத்தைப் பற்றி ஞாபகப்படுத்துகிறார்கள்.
ஆமாம்! இயக்குனர் சௌந்தர்யா ரஜினிகாந்த் தானே! ரஜினிகாந்த் என்று போட்டதே தன் மீது நம்பிக்கை இல்லை என்று சௌந்தர்யா அப்பாவின் பெயரையும் சேர்த்திருக்கிறார்! அப்பாவின் பணத்தை “லாவுவது” என்பது தான் அவருடையு திட்டம்! இந்தப் படம் ஊத்திக்கும் என்று தெரிந்து தான் ரஜினி உடனே அடுத்தப் படத்தைத் தொடக்கிவிட்டார்! பாவம்! உடல்நிலை சரியில்லாத நேரத்தில் அவர் தொடர்ந்து வேலை செய்ய வேண்டிய நெருக்கடி! இதற்குத்தான் பிள்ளைகள்!
மிக்க மகிழ்ச்சியான செய்தி ! இன்னும் பல ரஜினி படங்கள் தோல்வி கண்டு போகவேண்டும் ! அப்படி நடந்தால் தமிழ் இளைஞர்களின் பணம் மிச்சம் ! பால் செலவும் இருக்காது !
ரஜினியின் வெளியுலக அனுகுமுறைகள் குறித்து நான் எதுவும் கருத்துகூற விரும்பவில்லை. அவருடைய பல அனுகுமுறைகள் எனக்கு உடன்பாடில்லை. உதாரணமாக, அன்மையில் நடைபெற்ற மோதியின் பதவியேற்பு விழாவில் இவர் கலந்துகொள்ளாமல் தவிர்த்து தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதாக காட்டிய ரஜினி, தம்முடைய மகளையும் மணைவியையும் அந்த விழாவிற்கு அனுப்பிவைத்ததை கண்டேன். அவருக்கு இது சரியென்றால் அவரே துணிவுடன் கலந்துகொண்டிருக்க வேண்டும். அதை அவர் செய்யாமல், பிள்ளையையும் மணைவியையும் அனுப்பி, அதை எந்தப் பத்திரிகையிலும் வராமல் பார்த்துக்கொண்டார். இதையோ ,குறிப்பாக கலைஞர்ரோ அல்லது ஜெயாவோ செய்திருந்தால் மீடியாக்கள் தமிழின துரோகி என்று பக்க பக்கமாக எழுதி தங்களின் மனச் சொறியை சொறிந்துகொண்டிருப்பார்கள். அது வேறு விஷயம். கோச்சடையான் என்பது ஒரு கன்னி முயற்சி. முதல் படம். இந்தப் படத்தை துணிவுடன் தயாரித்தவர்களையும், நடித்தவர்களையும் பாராட்டாமல் குறைகாண துடிப்பதும், அவர்களை இத்துறையிலிருந்தே ஒழிக்கும் குரூர எண்ணத்தில் குறைகளை அள்ளி வீசுவதும் நல்ல மீடியாக்களுக்கும், நல்ல மனிதர்களுக்கும் ஏன் நல்ல தமிழனுக்கும் அழகல்ல. ரஜினியோ அல்லது அவரது மகள் சௌந்தர்யாவோ இந்த நிலையை அடைய நிறைய உழைத்திருக்கிறார்கள். அவர்கள் அழிந்து ஒன்றுமில்லாமல் எல்லாவற்றையும் இழக்கவேண்டும் எனும் எண்ணம் எவ்வளவு பெரிய அருவருக்கத்தக்க , தமிழர் பண்பாடேயில்லா குணம் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டுகிறேன்.