ரஜினியை முந்துகிறார் மருதநாயகம் கமல்!

marudhanayagam_mநல்ல தரமான கதைகள் என்பதையும் தாண்டி பிரமாண்ட படங்களில் நடிப்பதில் சமீபகாலமாக ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களின் கவனம் திரும்பி நிற்கிறது. அந்த வகையில், கமலின் விஸ்வரூபம், 100 கோடியை தாண்டி படமாக்கப்பட்டது. இப்போது அப்படத்தின் இரண்டாம் பாகம் அதை விட அதிக பட்ஜெட்டில் தயாராகி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், பிரமாண்ட படங்களுக்குப் பேர்போன டைரக்டர் ஷங்கர், 100 கோடி, 150 கோடி என்று படமெடுப்பதில் வல்லவர். அதில் ரஜினியைக்கொண்டு அவர் இயக்கிய எந்திரன் 200 கோடியை தாண்டி படமாக்கப்பட்டது. அந்த வகையில் இந்திய அளவில் அதிக பட்ஜெட்டில் தயாரான படமாகவும் எந்திரன் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது.

இந்த நிலையில், 1997ல் இங்கிலாந்து ராணி எலிசபத்தை சென்னைக்கு அழைத்து வந்து கமல் பிரமாண்டமான முறையில் தனது மருதநாயகம் படத்துக்கு பூஜை போட்டார். ஆனால், பின்னர் பைனான்ஸ் பிரச்னையால் அப்படம் நிறுத்தப்பட்டது. ஆனால், இப்போது அப்படத்தை தயாரிக்க ஒரு ஹாலிவுட் நிறுவனம் முன்வந்துள்ளதாம். அதனால், உத்தமவில்லன், த்ரிஷ்யம் ரீமேக் படங்களில நடித்து முடித்தும் அப்படத்தை மீண்டும் தூசு தட்டுகிறாராம் கமல்.

அதோடு, 1997ல் அப்படத்துக்கு 85 கோடி பட்ஜெட் போட்ட கமல், இன்றைய நிலையில், மருதநாயகத்தை முடிக்க 500 கோடி வேண்டும் என்று கூறியுள்ளாராம். அதற்கு அந்த நிறுவனம் தயார் நிலையில் உள்ளதாம். அப்படி 500 கோடி செலவில் மருதநாயகம் உருவானால், இந்திய அளவில் அதிக பட்ஜெட்டில தயாரான ரஜினியின் எந்திரன் படத்தை முறியடித்து. முதலிடத்தை கமலின் மருதநாயகம் பிடித்து விடும்.